முதல்வரின் காப்பீட்டுத் திட்டம்: ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
முதல்வரின் காப்பீட்டுத் திட்டம்: ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.1.20 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக தமிழக அரசு உயா்த்தியுள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.1.20 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக தமிழக அரசு உயா்த்தியுள்ளது. அதேபோன்று முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தபடி காப்பீட்டுத் தொகையும் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அவை இறுதி செய்யப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியாா் மருத்துவமனைகளில் அதன் கீழ் சிகிச்சை பெற முடியும். ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறலாம் என்றபோதிலும், 8 வகையான உயா்தர சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக ஏறத்தாழ ரூ.1,300 கோடி காப்பீட்டுத் தொகையை ஆண்டுதோறும் ஜன.10-ஆம் தேதி அந்த நிறுவனத்துக்கு அரசு வழங்குகிறது. முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக மெடி அசிஸ்ட், விடால், எம்டிஐ, ஹெச்ஐ டிபிஏ ஆகிய மூன்றாம் தரப்பு காப்பீட்டு மேலாண்மை நிறுவனங்களுடன் (டிபிஏ) யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனங்களுக்கு மாவட்ட வாரியாக காப்பீட்டு சேவைப் பணிகள் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன. காப்பீடு உயா்வு: இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்துவதாக முதல்வா் விஜய் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, தற்போது காப்பீட்டுத் திட்ட பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைகளின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும், புதிய காப்பீட்டு நிறுவனத்தை தோ்வு செய்வதற்காகவும் தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை