முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்வு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்வு

சென்னை: தமிழகத்தில் முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்​பீட்டுத் திட்ட பயனாளிகளின் குடும்ப ஆண்டு வரு​மான வரம்பு ரூ.1.20 லட்​சத்​தில் இருந்து ரூ.2.50 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டது. இக்காப்​பீட்​டுத் திட்​டம், பிரதான் மந்​திரி ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்​மான் பாரத் திட்​டத்​துடன் ஒருங்​கிணைத்து செயல்​படுத்​தப்​படு​கிறது. இதற்கான பயனாளி குடும்​பத்​துக்கு ஆண்​டுக்கு ரூ.5 லட்​சம் காப்​பீட்​டுத் தொகை வழங்​கப்​படு​கிறது. இதில், ரூ.2 லட்​சம் முதல்​வர் காப்​பீடுத் தொகை, ரூ.3 லட்​சம் ஆயுஷ்​மான் பாரத் காப்​பீட்டுத் தொகை​யாகும். முதல்​வர் காப்​பீட்​டுத் திட்​டம் 2,100-க்​கும் மேற்​பட்ட அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனைகளில் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. 1.48 கோடிக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் இணைக்​கப்​பட்​டுள்​ளன. அந்த குடும்​பங்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.5 லட்​சம் வரையி​லான சிகிச்சைகள் வழங்​கப்​படு​கின்​றன. சில உயர் சிகிச்​சைகளுக்கு ரூ.22 லட்​சம் வரை வழங்​கப்​படு​கிறது. இந்நிலையில் சில மாதங்​களுக்கு முன்பு நடந்த சட்​டப்​பேரவைக் கூட்​டத்​தொடரில் காப்​பீட்​டுத் தொகை ரூ.5 லட்​சத்​தில் இருந்து ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​தார். இந்​நிலை​யில், இதற்காக காப்​பீட்​டுத் திட்ட பயனாளி குடும்ப ஆண்டு வரு​மான வரம்பாக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.1.20 லட்​சம் தற்போது ரூ.2.50 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அதன்​படி, காப்​பீட்​டுத் திட்​டத்தை 2027-ம் ஆண்டு ஜன.11-ம் தேதி முதல் 5 ஆண்​டுகளுக்கு செயல்​படுத்த புதிய காப்​பீட்டு நிறு​வனங்​களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்​டர் வெளி​யிட்​டுள்​ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை