முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் - படம் | AP முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது. பென் டக்கெட் சதம் விளாசல்; இலங்கைக்கு 387 ரன்கள் இலக்கு! முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் பாண்டன் மற்றும் பென் டக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 163 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய டாம் பாண்டன் 75 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 132 பந்துகளில் 167 ரன்கள் எடுத்தார். அதில் 24 பவுண்டரிகள் அடங்கும். பென் டக்கெட்டின் விக்கெட்டினை எஷான் மலிங்கா வீழ்த்தினார். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் 44 ரன்கள், வில் ஜாக்ஸ் 30 ரன்கள், ஜோர்டான் காக்ஸ் 43 ரன்கள் மற்றும் சாம் கரண் 21* ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷங்கா, எஷான் மலிங்கா மற்றும் தாசுன் ஷானகா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பென் டக்கெட் சதம் விளாசல்; இலங்கைக்கு 387 ரன்கள் இலக்கு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗