முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் - படம் | AP முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி திடலில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடியது. கமிந்து மெண்டிஸ் சதம் விளாசல்! முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 128 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பவன் ரத்நாயகே 77 ரன்களும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 38 ரன்களும் எடுத்தனர். தாசுன் ஷானகா 17 ரன்கள், சஹான் 15 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் ஷாகின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, சல்மான் அகா மற்றும் ஹாரிஸ் ரௌஃப் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: கமிந்து மெண்டிஸ் சதம்; பாகிஸ்தானுக்கு 326 ரன்கள் இலக்கு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗