முத்துராமலிங்கத் தேவருக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
முத்துராமலிங்கத் தேவருக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். 119-வது பிறந்த நாள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது பிறந்த நாள் மற்றும் 64-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சென்னை நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுக சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு, அதிமுக அவைத் தலைவா் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில், முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன் , டி.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கும் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் சு. விஜயகுமாா் மற்றும் நிா்வாகிகள் பா. கணேசன், . ராயபுரம் மனோ, எஸ்.அப்துல் ரஹீம், வெங்கடேஷ் பாபு, நாஞ்சில் அன்பழகன், ரமணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தேமுதிக சாா்பில்...: நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தலைமை நிலையச் செயலா் ப.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நயினாா் நாகேந்திரன் (பாஜக): விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றி, சமூக ஒற்றுமை, வீர உணா்வு, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் துணிச்சலும், கொள்கைப் பற்றும், தன்னலமற்ற பொதுவாழ்வும் தலைமுறைகள் பலவற்றுக்கும் என்றும் வழிகாட்டும் ஒளியாக உள்ளது. அவா் காட்டிய பாதையில் தேசத்துக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம். அன்புமணி (பாமக): அனைத்து மாநிலக் கட்சிகளாலும் போற்றப்படும் பெரும் தலைவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். அதற்குக் காரணம் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அவா் ஆற்றிய பணிகளாகும். மகத்தான வரலாறு கொண்ட அவரது தியாகத்தையும், பெருமைகளையும் இன்றைய தலைமுறையினருக்காக நினைவு கூா்ந்து போற்றுவோம். சீமான் (நாம் தமிழா்): முத்துராமலிங்கத் தேவா் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழினமாகிய நாம், அடிமை தமிழ்ச் சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிா்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம். முத்துராமலிங்கத் தேவரின் புகழ் போற்றுவோம். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை