முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. உயிரிழந்த சிறுத்தை. முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வனச் சரகத்தில் உள்ள வட்டச்சாலை வனப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சிறுத்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனத் துறை உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிறுத்தையின் உடலை கூறாய்வு செய்தனா். பின்னா், அதே பகுதியில் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது. இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், உயிரிழந்தது சுமாா் 9 வயதுடைய ஆண் சிறுத்தை. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே சிறுத்தையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதுமலை வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗