"நான் பேயுடன் வாழ்கிறேன்" - ஜப்பானில் பிரபலமாகும் பேய் வீடுகள்; விலையில் சலுகை கிடைக்கும் என்பதால் ஆர்வம் காட்டும் மக்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
"நான் பேயுடன் வாழ்கிறேன்" - ஜப்பானில் பிரபலமாகும் பேய் வீடுகள்; விலையில் சலுகை கிடைக்கும் என்பதால் ஆர்வம் காட்டும் மக்கள்

டோக்கியோவில் உள்ள தனது வாடகை அடுக்குமாடி வீட்டுக்குள் ரியுவா முதன்முதலில் நுழைந்த அந்த நொடியிலிருந்தே, அந்த வீடு 'பேய்கள் வசிக்கும் இடம்' என்று அவர் நம்பினார். "நான் அந்த வீட்டைப் பார்வையிடச் சென்றபோது, அங்கே ஒரு ஆண் நின்றுகொண்டு என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எஸ்டேட் ஏஜென்டால் அவரைக் காண முடியவில்லை. அதனால் அவர் ஒரு பேயாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்." பலரும் பயந்துவிட்டு அந்த வீட்டைவிட்டு உடனே வெளியேறி, மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருப்பார்கள். ஆனால் ரியுவா அங்கேயே குடியேற முடிவு செய்தார். "நான் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திப்பவள். அதனால் என்னை முறைத்துப் பார்த்த அந்த ஆண் பேயுடன் நண்பராக வேண்டுமென முடிவு செய்தேன்," என்கிறார் ரியுவா. அவர் ஒரு ஐடோருவாக (ஜப்பானிய இளம் பொழுதுபோக்கு கலைஞர்) பணியாற்றுகிறார். அவர் தனது குடும்பப் பெயரைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் அதே வீட்டில் வசித்து வரும் அவர், தினமும் அமானுஷ்ய நிகழ்வுகளை அனுபவிப்பதாகக் கூறுகிறார். முடிவில்லாத காலடிச் சத்தங்களையும், அந்தப் பேய் பேசுவதையும் தான் கேட்பதாகக் கூறுகிறார் அவர். சமீப ஆண்டுகளில் ஜப்பானில் ஹாலோவீன் கொண்டாட்டம் அதிகரித்து இருந்தாலும், ஜப்பானியர்கள் பலர் ஆண்டு முழுவதும் பேய்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நாட்டில் "யூரேய்" (Yuurei) என்ற ஒரு சொல் உள்ளது. அதற்கு, இந்த உலகை விட்டு முழுமையாகப் பிரியாமல், கவலைகளுடனும் நிறைவேறாத உணர்வுகளுடனும் அலைந்து திரியும் ஆவி என்று பொருள். இவர்கள் வன்முறை அல்லது துயரமான சூழ்நிலைகளில் உயிரிழந்தவர்களின் ஆவிகளாகக் கருதப்படுகிறார்கள். அதாவது, கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், அல்லது தனிமையில் வாழ்ந்து யாருமின்றி இறந்தவர்கள். அவர்கள் வீட்டிலேயே இறந்திருந்தால், அவர்களின் "யூரேய்" (Yurei) அந்த இடத்தைவிட்டுப் பிரியாது என்ற நம்பிக்கை நிலவுகிறது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு மூடநம்பிக்கையோ அல்லது பயமோ இல்லாத வீடு தேடுபவர்களுக்கு, இது பெரிய அளவிலான விலைச் சலுகைகளைப் பெறும் வாய்ப்பாக அமைகிறது. இதற்கென "ஜிகோ புக்கென்" (Jiko Bukken) என்ற ஒரு வகை வீடுகள் உள்ளன. அதற்கு "களங்கப்படுத்தப்பட்ட சொத்து" அல்லது "சம்பவம் நடந்த சொத்து" என்று பொருள். கடந்த 2021ஆம் ஆண்டு ஜப்பான் அரசு வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, தற்கொலை, கொலை, தீ விபத்தில் ஏற்பட்ட மரணம், அல்லது உடல் நீண்ட காலமாகக் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த மரணம் போன்ற விவரங்களை சொத்து முகவர்கள் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். வாடகை வீடுகளுக்கு இந்தத் தகவல் மூன்று ஆண்டுகள் வரை வெளியிடப்பட வேண்டும். விற்பனைக்கு வரும் சொத்துகளுக்கோ, அந்த விவரங்கள் காலவரையறையின்றி தெரிவிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக, பிரிட்டனில் ஒரு வீட்டில் ஒருவர் இறந்திருந்தார் என்பதைத் தெரிவிக்க சட்டரீதியான கட்டாயம் இல்லை. அமெரிக்காவில் இது ஒவ்வொரு மாகாணத்திலும் மாறுபடுகிறது. உதாரணமாக, கலிஃபோர்னியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அந்த வீட்டில் ஒருவர் இறந்திருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அரிசோனா, ஒரேகன் மாகாணங்களில் அத்தகைய கட்டாயம் இல்லை. ரியுவாவிடம், அவரது குடியிருப்பில் முன்பு ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், டோக்கியோவின் நவநாகரிகமான செதாகயா பகுதியிலுள்ள அவரது 25 ச.மீ. அளவுள்ள சிறிய குடியிருப்புக்கு சுமார் 30% வாடகைத் தள்ளுபடி கிடைக்கிறது. சாதாரணமாக 62,000 யென் இருக்க வேண்டிய வாடகைக்கு பதிலாக, மாதத்துக்கு 45,000 யென் (சுமார் 285 அமெரிக்க டாலர்) மட்டுமே செலுத்துவதாக அவர் கூறுகிறார். உலகின் எந்தப் பகுதியிலும் கொலை அல்லது தற்கொலை நடந்த வீடுகளை விற்கவும் வாடகைக்கு விடவும் சிரமம் இருக்கலாம். டோக்கியோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவர் எரிக் ஒஸ்காம்ப் கூறுவதன்படி, ஜப்பானியர்கள் குறிப்பாக மூட நம்பிக்கைகளில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் இத்தகைய "களங்கப்படுத்தப்பட்ட" சொத்துகளை அவர்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். பட மூலாதாரம், Diane Tincher "கல்லறைக்கு அருகில் இருக்கும் ஒரு குடியிருப்பைக்கூட வாடகைக்கு விடுவது கடினம். குறிப்பாக சமையலறையில் இருந்து கல்லறைகளைப் பார்க்க முடிந்தால் இன்னும் சிரமம்," என்று ஒஸ்காம்ப் விளக்குகிறார். "அதில் மிகவும் மோசமானது, அந்தக் குடியிருப்பில் தற்கொலை நடந்திருந்தால்தான். யாராவது கூரை மீதிருந்து குதித்து உயிரிழந்திருந்தால்கூட பல வாடகையாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள். அதேபோலக் கடுமையான குற்றச் சம்பவங்கள் அல்லது தனிமையில் யாரும் அறியாமல் இறந்த சம்பவங்களும் பிரச்னையாகக் கருதப்படுகின்றன." ஒருவர் தனியாக இறந்துவிடும் இந்த நிலை, பொதுவாக பிரிட்டன் அல்லது அமெரிக்காவில் சொத்து விலையைப் பாதிக்காது. ஆனால் ஜப்பானின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ககோஷிமா என்ற கிராமப்புறப் பகுதியில், டயன் டின்சர் என்ற பெண் மூன்று படுக்கையறைகள் கொண்ட பெரிய வீட்டை வழக்கமான விலையில் இருந்து சுமார் பாதி விலைக்கே வாங்க முடிந்தது. அமெரிக்கரான 79 வயதான டயன் டின்சர், சுமார் 40 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். அவர் சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றியுள்ளார். தனியாக வாழ்ந்த ஒரு வயதான பெண் அந்த வீட்டில் இறந்ததால், அந்தச் சொத்து "களங்கப்படுத்தப்பட்ட சொத்து" என்று கருதப்பட்டது. அதனால்தான் பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டதாக ஏஜென்ட் நேர்மையாகத் தெரிவித்தார் என்று அவர் கூறுகிறார். டின்சர் அந்த வீட்டை 2 கோடி யென் கொடுத்து வாங்கினார். அதே பகுதியில் இதேபோன்ற வீடுகள் பொதுவாக 4.5 கோடி யென் வரை விற்கப்படுகின்றன. "எனக்குப் பேய்கள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் ஜப்பானியர்கள் மிகவும் மூடநம்பிக்கைகள் கொண்டவர்கள் என்பது எனக்குத் தெரியும். உண்மையில் பேய் இருந்தாலும், இவ்வளவு அழகான மற்றும் மலிவான வீட்டில் வாழும் வாய்ப்பைத் தந்ததற்காக, அந்தப் பெண்ணுக்கு நான் தினமும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Diane Tincher டின்சர் இந்த வீட்டைப் பற்றி ஆராய்ந்தபோது, "ஓஷிமாலாண்ட்" (Oshimaland) என்ற இணையதளத்தில் அதைக் கண்டறிந்தார். அந்த இணையதளம் "ஜிகோ புக்கென்" சொத்துகளின் பட்டியலை வழங்குகிறது. அங்கு நடந்த சம்பவங்கள் பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். 2005ஆம் ஆண்டு டோக்கியோவை மட்டும் மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அந்தத் தளம், பின்னர் ஜப்பான் முழுவதும் விரிவடைந்து, 2011ஆம் ஆண்டு சர்வதேச அளவிலும் பரவியது. இது பொதுமக்களின் பங்களிப்பால் இயங்கும் இணையதளம். அதாவது, மக்களே வீடுகளின் விவரங்களையும் அவற்றில் நடந்த சம்பவங்களையும் சேர்க்கிறார்கள். ஓஷிமாலாண்டின் நிறுவனர் தெரு ஓஷிமா கூறுகையில், கடந்த காலத்தில் இத்தகைய சொத்துகள் ஜப்பானில் "அவ்வளவு கவர்ச்சிகரமான தேர்வுகளாக" கருதப்படவில்லை. ஆனால், சமீப ஆண்டுகளில் ஜப்பானில் வீட்டு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதோடு வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஜப்பானியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விலை மலிவாக இருந்தால் ஜிகோ புக்கென் வீட்டை வாடகைக்கு எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. செதாகயாவில் வாழும் ரியுவா, தனது "பேய்த் தோழருடன்" வசிப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார். "பேய்கள் ஒரு காலத்தில் மனிதர்களாக வாழ்ந்தவர்களே என்று நம்புகிறேன். எனவே அவர்களுக்கும் நமது மரியாதை கிடைக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை