ஜான் டோ படத்தின் முதல் பாடலான நான் போதுமா வெளியானது குறித்து... அர்ஜுன் தாஸ் - படம் - யூடியூப் ஜான் டோ படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ பாடல் புதன்கிழமை (அக். 28) வெளியானது. இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் ஜான் டோ. இந்தப் படத்தை அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ‘நான் போதுமா’ பாடல் வெளியானது. இந்தப் பாடலை அர்ஜுன் தாஸ் மற்றும் மாளவிகா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் போதுமா... ஜான் டோ படத்தின் பாடல் வெளியானது!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗