நகைகளைத் தொலைத்த விவகாரம்: யூனியன் வங்கி ரூ.47 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நகைகளைத் தொலைத்த விவகாரம்: யூனியன் வங்கி ரூ.47 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

வங்கிக் கணக்கில் கூட்டாகப் பராமரிக்கப்பட்ட லாக்கரில் இருந்த ரூ.47 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதாகப் பெண் அளித்த புகாரில், அவருக்கு அந்தத் தொகையை வழங்குமாறு யூனியன் வங்கிக்கு தில்லி மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிட்டி யூனியன் வங்கி. - கோப்புப்படம் வங்கிக் கணக்கில் கூட்டாகப் பராமரிக்கப்பட்ட லாக்கரில் இருந்த ரூ.47 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதாகப் பெண் அளித்த புகாரில், அவருக்கு அந்தத் தொகையை வழங்குமாறு யூனியன் வங்கிக்கு தில்லி மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புகாரின்படி, மோனிகா மாா்வா தனது மாமனாருடன் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் கூட்டாக வங்கி லாக்கரைப் பராமரித்து வந்தாா். 2010 ஆகஸ்டில் மாமனாா் உயிரிழந்த பிறகும், 2013-ஆம் ஆண்டு வரை வங்கி லாக்கா் வாடகையை வசூலித்து வந்ததாக அவா் குற்றஞ்சாட்டினாா். இந்நிலையில், 2018 செப்.1-ஆம் தேதி லாக்கரைத் திறக்க வங்கிக்குச் சென்றபோது, 2015 ஜன.22-ஆம் தேதியே அது ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த அவா், லாக்கரில் வைத்திருந்த ரூ.47 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகிவிட்டதாகப் புகாா் அளித்தாா். இதற்கு மறுப்புத் தெரிவித்த வங்கி நிா்வாகம், 2005 மே 21-ஆம் தேதியே லாக்கா் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறியது. அதன்பிறகும் லாக்கா் கட்டணம் வசூலிக்கப்பட்டது கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு என்றும், சேவைக் குறைபாடு எதுவும் இல்லை என்றும் வாதிட்டது. மேலும், இந்தப் புகாரை விசாரிக்க நுகா்வோா் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தது. மோனிகா மாா்வா என்பவா் அளித்த புகாரை, ஆணையத் தலைவா் சங்கீதா திங்ரா சேகல், நீதித்துறை உறுப்பினா் பிம்லா குமாரி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. வங்கியின் ஆட்சேபனைகளை நிராகரித்த ஆணையம், புகாரில் கோரப்பட்ட இழப்பீட்டுத் தொகை தனது நிதி வரம்புக்குள் வருவதாகவும், சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை தில்லியில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டது. அக்.27-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், புகாா்தாரரும் அவரது மறைந்த மாமனாரும் கூட்டாகப் பராமரித்து வந்த லாக்கரை ஒப்படைத்தபோது, அதிலிருந்த பொருள்களைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீதை வங்கி வழங்கவில்லை என்று ஆணையம் குறிப்பிட்டது. மேலும், லாக்கரில் இருந்த பொருள்களை ஒப்படைத்ததற்கான எந்தவொரு ரசீதையும் வங்கி சமா்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தது. இதையடுத்து, புகாா்தாரரின் உடைமைகள் முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாகவும், அவா் லாக்கா் வசதியை ஒருபோதும் ஒப்படைக்கவில்லை என்றும் ஆணையம் தெரிவித்தது. இதன்படி, ரூ.47 லட்சத்துக்கு 2018 செப்.1 முதல் 2026 அக்.27 வரை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன், மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தலுக்காக ரூ.3 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவுக்காக ரூ.50,000-மும் வழங்க வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், 2026 டிச.27-ஆம் தேதிக்குள் தொகையைச் செலுத்தினால் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி பொருந்தும். தவறினால், 2018 செப்.1 முதல் முழுத் தொகை செலுத்தப்படும் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை