நகராட்சித் துறை பணிநியமன முறைகேடு: கே.என்.நேரு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
நகராட்சித் துறை பணிநியமன முறைகேடு: கே.என்.நேரு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புது டெல்லி: நக​ராட்சித் துறை அதி​காரிகள் நியமனத்​தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்​பாக வழக்குப் ப​திவு செய்ய, லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்த சென்னை உயர்​நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்​முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்வதற்கான தடைகள் நீங்கியுள்ளன. கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் நக​ராட்சி நிர்​வாக துறை​யில் 2,538 உதவி பொறி​யாளர்கள் மற்​றும் இளநிலை பொறியாளர்​கள் உள்​ளிட்ட அதி​காரி​கள் நியமனத்​துக்கு ரூ.634 கோடி லஞ்​சம் பெறப்​பட்​டுள்​ள​தாகவும், இது குறித்து வழக்​குப் பதிவு செய்​யுமாறு, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்​கத் துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்​தின் அடிப்படை​யில், வழக்குப்​பதிவு செய்ய லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு உத்​தர​விடக்கோரி அதிமுக எம்.பி. இன்​ப​துரை தாக்​கல் செய்த மனுவை ஏற்று, வழக்​குப் பதிய உயர் நீதிமன்றம் உத்​தரவிட்​டது. இதனிடையே, தனது தரப்பு வாதங்​களை கேட்​காமல் பிறப்​பிக்​கப்​பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்​யக்​கோரியும் முந்​தைய ஆட்​சி​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை, தற்​போதைய அரசு வாபஸ் பெற முடி​யாது எனவும், அரசுக்கு அந்த அதி​காரம் இல்லை எனவும் கூறி கே.என்.நேரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசா​ரித்த சென்னை உயர் ​நீதி​மன்​றம் அவரின் மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது. இதையடுத்து, சென்னை உயர் நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து கே.என்.நேரு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவானது நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை பகிர்ந்து கொண்ட ஆதாரங்களின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு உத்தரவுகளிலும் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்ற அமர்வு கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவில், “வழக்கில் தொடர்புடைய கே.என்.நேரு தனது துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். எனவே முறைகேட்டுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்வது அவசியம். அவர் இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை