நள்ளிரவு விண்ணில் பாயும் இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. என்ன காரணம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
நள்ளிரவு விண்ணில் பாயும் இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. என்ன காரணம்

சென்னை: இந்தியாவின் நேவிகேஷன் சாட்டிலைட் சர்வீஸை வலுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் NVS-03 செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. GSLV-F18 ராக்கெட் இன்று (அக்டோபர் 30) இரவு 11.51 மணிக்கு இதை விண்ணில் ஏவ உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இன்றிரவு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும். பெரும்பாலும் நாம் நேவிகேஷன் செய்ய அமெரிக்காவின் ஜிபிஎஸ் சேவையையே பயன்படுத்துகிறோம். ஆனால், வெளிநாட்டு தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பி இருப்பது ஆபத்தானது என்பதால் இந்தியா தனக்கான நேவிகேஷன் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு சாட்டிலைட்கள் செலுத்தப்பட்டுள்ளன. GSLV-F18 இதற்கிடையே அடுத்தகட்டமாக NVS-03 சாட்டிலைட்டை சுமந்து கொண்டு GSLV-F18 ராக்கெட் இன்று (அக்டோபர் 30) இரவு 11.51 மணிக்கு இதை விண்ணில் பாயவுள்ளது.. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்றிரவு தொடங்கப்பட்டது.. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. சுமார் 50 மீட்டர் உயரமும், மூன்று நிலைகளை கொண்டதுமான GSLV-F18 ராக்கெட்டின் மொத்த எடை 420 டன். இது 2,232 கிலோ எடையுள்ள NVS-03 செயற்கைக்கோளை புவிநிலை மாற்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளது. இந்தியாவின் இரண்டாம் தலைமுறை NVS செயற்கைக்கோள் சீரியஸின் மூன்றாவது செயற்கைக்கோள் NVS-03 ஆகும். இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் அமைப்பான NavIC சேவையை வலுப்படுத்துவதுடன், அது எந்தவொரு சிக்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக செயல்பட இந்த செயற்கைக்கோள் உதவும். இதில் விண்வெளி மையம் உருவாக்கிய உள்நாட்டு ரூபிடியம் அணு கடிகாரம் இடம்பெற்றுள்ளது. மேலும் இது L1, L5 மற்றும் S அலைவரிசைகளில் சிக்னல்களை அனுப்பும். குறிப்பாக L1 அலைவரிசை இருப்பதால், நவீன ஸ்மார்ட்போன்கள் உடன் இது ஈஸியாக வேலை செய்யும். கடந்த 2025 ஜனவரியில் ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோள், இணைப்பு கோளாறு காரணமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைய முடியாமல் போனது. அந்த பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், NVS-03 சாட்டிலைட்டில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ராக்கெட் ஏவப்படும்போது அதிர்வுகள் ஏற்படும். அவை சாட்டிலைட்டிற்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முறை அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மூடப்பட்டிருக்கும் சில எரிபொருள் கட்டுப்பாட்டு வால்வுகள், இந்த முறை திறக்கப்பட்ட நிலையில் சாட்டிலைட் அனுப்பப்படுகிறது. மேலும், பாதுகாப்பு சார்ந்த சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாட்டிலைட்டை அதற்குரிய பாதையில் நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின் பாகங்கள் கீழே விழும். இது வங்கக்கடலில் தான் விழும் என்பதால் நாளை காலை வரை பாதுகாப்பு காரணங்களுக்காக பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட பிறகு சாட்டிலைட் தனது சுற்றுப்பாதையை உயர்த்தி, 32.5 டிகிரி கிழக்கே உள்ள புவிநிலை சுற்றுப்பாதையை அடையும். இந்த ராக்கெட் லாஞ்சை 11.20 மணி முதல் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலும், யூடியூப் தளத்திலும் நேரலையாகப் பார்க்கலாம். இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால்.. இது இந்திய நேவிகேஷனில் மிக முக்கிய மைல்கல்லை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை