'நம்ப முடியாத அனுபவம்'; பைகளில் வைத்து கைவிடப்பட்ட 3 குழந்தைகள் - பல ஆண்டுகள் கழித்து உடன்பிறந்தவர்களாக ஒன்றிணைந்தது எப்படி?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
'நம்ப முடியாத அனுபவம்'; பைகளில் வைத்து கைவிடப்பட்ட 3 குழந்தைகள் - பல ஆண்டுகள் கழித்து உடன்பிறந்தவர்களாக ஒன்றிணைந்தது எப்படி?

பட மூலாதாரம், Helen Ward "நான் நீல நிற உடை அணிந்திருந்த நிலையில், டார்டன் பையில் கண்டெடுக்கப்பட்டேன்." டார்டான் பை என்பது கட்டம் போட்ட துணிப்பை. பெல்ஃபாஸ்டில் அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த டேவிட் மெக்பிரைட், தான் தத்தெடுக்கப்பட்டவர் என்பதை எப்போதும் அறிந்திருந்தார். ஆனால், தனது 15வது வயதில் ராணுவத்தில் சேர்வதற்காகப் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தபோதுதான், தனது பிறப்பு குறித்த தகவல்கள் எவ்வளவு குறைவாக உள்ளன என்பதை அவர் உணர்ந்தார். அந்த ஆவணத்தில் ஏறக்குறைய எந்தத் தகவலும் இல்லை. அவரது உயிரியல் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் பிறந்த இடம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களும் அதில் இல்லை. அவரது வளர்ப்புத் தந்தை, தனக்குத் தெரிந்த சில தகவல்களை அவரிடம் தெரிவித்தார். மெக்பிரைட் கைவிடப்பட்ட குழந்தையாக இருந்தார். குழந்தையாக இருந்தபோது, பூட்டப்படாத ஒரு காரின் முன் இருக்கையில் அவர் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பட மூலாதாரம், Helen Ward தங்களால் என்னென்ன தகவல்களைக் கண்டறிய முடியும் என்பதை அறிந்துகொள்ள மெக்பிரைட்டும் அவரது தந்தையும் முடிவு செய்தனர். உள்ளூர் பொது நூலகத்தில் ஆய்வு செய்யத் தொடங்கிய அவர்கள், செய்தித்தாள் துணுக்குகளைத் தேடிப் படித்தனர். அவர் கண்டெடுக்கப்பட்டபோது, இந்தச் சம்பவம் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் வடக்கு அயர்லாந்தில் குழந்தைகளைக் கைவிடுவது என்பது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. திருமண உறவைக் கடந்து பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தேவாலயம் பெரும்பாலும் ஆதரவு அளித்ததாக அல்லது குறைந்தபட்சம் தங்குமிடமாவது வழங்கியதாக மெக்பிரைட் விளக்குகிறார். End of அதிகம் படிக்கப்பட்டது "ஒரு பெண் திருமண உறவைக் கடந்து கர்ப்பமானால், அவர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டார். எல்லாவற்றையும் மறைத்து வைப்பதுதான் [அப்போது நிலவிய] பிரச்னையாக இருந்தது." செய்தித்தாள் துணுக்குகள் அவருக்குப் பெரியளவில் தகவல்களைத் தரவில்லை. ஆனால், அவர் நன்றாகப் பராமரிக்கப்பட்டார் என்பதை அவை தெரிவித்தன. "எனக்கு நன்றாக உணவு அளிக்கப்பட்டது; நன்றாகக் கவனித்துக்கொள்ளப்பட்டேன்." தனது தாய் இளம் வயதினராகவும் அச்சத்தில் இருந்தவராகவும் இருந்திருக்கலாம் என்று அவர் ஊகித்தார். அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய முடிவு செய்தார். பட மூலாதாரம், Helen Ward ஆனால், பல தசாப்தங்கள் கடந்தும், கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்த பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது உட்பட பல்வேறு வழிகளில் தேடியும், மெக்பிரைட்டுக்கு மிகக் குறைவான பதில்களே கிடைத்தன. பின்னர், தனது சகோதரியின் ஊக்கத்தால் டிஎன்ஏ பரிசோதனை செய்துகொள்ள அவர் முடிவு செய்தார். அந்தப் பரிசோதனையின் முடிவு எல்லாவற்றையும் மாற்றியது. அவருக்கு ஒரு உயிரியல் சகோதரி இருப்பது தெரியவந்தது. "அது ஓர் அற்புதமான அதிர்ச்சியாக இருந்தது... கிறிஸ்துமஸ் வந்துவிட்டதைப் போல இருந்தது." அவரது சகோதரியின் பெயர் ஹெலன் வார்டு. ஆனால், தனது தாயைப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அவருக்கும் அதே அளவிலான கேள்விகள் இருந்தன. அவரும் குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்டவர்தான். "நான் பச்சை நிற டார்டன் பையில், ஒரு தொலைபேசிக் கூண்டுக்குள் கண்டெடுக்கப்பட்டேன்" என்று கூறும் வார்டு, "நாங்கள் இருவரும் டார்டன் இரட்டையர்கள் என்று முதலில் நினைத்தேன்" என்கிறார். பட மூலாதாரம், Helen Ward பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஆனால், அவர்கள் இரட்டையர்கள் அல்ல. இருவரும் ஏழு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தவர்கள். மேலும், அயர்லாந்தின் எல்லையின் எதிரெதிர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவர்கள். இருப்பினும், அவர்களுக்கிடையேயான ஒற்றுமைகள் வியப்பளிக்கும் வகையில் இருந்தன. "ஒரு லாரி ஓட்டுநர் தான் என்னைக் கண்டுபிடித்தார்" என்று பகிர்ந்து கொள்ளும் ஹெலன் வார்டு, "அந்தப் பையில் வெதுவெதுப்பான பால் பாட்டிலும் மாற்று உடைகளும் இருந்தன. எனக்கு மிக அழகான ஆடைகளை அணிவித்து, மிகவும் கதகதப்பாகச் சுற்றி வைத்திருந்தனர்" என்கிறார். மெக்பிரைடைப் போலவே, ஹெலன் வார்டும் அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்தார். ஆனால், அவரே ஒரு தாயானபோது, தனது சொந்தத் தாயைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் கண்டெடுக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த சமூகப் பணியாளர் ஒருவரைத் தொடர்புகொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு மெக்பிரைட் எதிர்கொண்டதைப் போன்ற பிறப்புச் சான்றிதழ் ஒன்று அவருக்குக் காட்டப்பட்டது. அதில், 'தாய் யார் என்பது தெரியவில்லை', 'தந்தை யார் என்பது தெரியவில்லை' என்றும், 'தொலைபேசிக் கூண்டில் ஆதரவற்ற நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. "நான் மிகவும் மனமுடைந்துபோனேன். உங்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். ஆனால், அவற்றுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்." அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹெலன் வார்டும் தனது கடந்த காலத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தொலைபேசி வாயிலாகத் தனது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்துகொண்டார். 1969-ம் ஆண்டு தனது வழக்கைக் கையாண்ட காவல்துறை அதிகாரியையும், முதன்முதலில் தன்னைக் கண்டுபிடித்த லாரி ஓட்டுநரையும் கண்டறிந்தார். ஆனால், அவரது நண்பர் ஒருவர் வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய டிஎன்ஏ பரிசோதனைக் கருவியை வாங்கிக் கொடுத்த பிறகுதான், நீண்ட காலமாகப் பிரிந்திருந்த தனது சகோதரரைக் கண்டுபிடித்தார். "அதை நம்பவே முடியவில்லை" என்று கூறும் அவர், "நடப்பது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்"என்கிறார். இறுதியாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்தபோது, ஒருவரிடம் மற்றவர் தங்களது உடல் ரீதியான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர். அந்த அனுபவம் அவர்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது. "எல்லாவற்றையும் உள்வாங்கிப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். உங்களிடம் சொல்ல வேண்டியவை ஏராளமாக இருக்கும். அவற்றைச் சொல்ல முடியாமல் வெடித்துவிடுவீர்கள் போலத் தோன்றும்" என்று ஹெலன் வார்டு நினைவுகூருகிறார். "நாங்கள் சந்தித்தவுடன், எங்களைச் சுற்றியிருந்த எதுவுமே இருப்பதாகத் தோன்றவில்லை" என்று மெக்பிரைட் கூறுகிறார். ஆனால், ஒரு தேடல் முடிவுக்கு வந்தபோது, அவர்களது பெற்றோரைத் தேடும் மற்றொரு தேடல் மீண்டும் தொடங்கியது. பட மூலாதாரம், Helen Ward இறுதியில், ஒருவரையொருவர் கண்டுபிடிப்பதற்குச் சற்று முன்புதான், அவர்களது தாய் 90 வயதில் உயிரிழந்திருந்தார் என்பதைத் தெரிந்துகொண்டனர். அவர்களது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இருப்பினும், அவர்களது வாழ்க்கைக் கதையின் சில பகுதிகளை அவர்களால் ஒன்றிணைக்க முடிந்தது. "எங்கள் தாய் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண். எங்கள் தந்தை நகரத்தில் வளர்ந்தவர்" என்று கூறும் மெக்பிரைட் "அவர் வயதில் மிகவும் இளையவர். வண்ணமயமான நகர வாழ்க்கையின் மீதான ஈர்ப்பு, அவரை அயர்லாந்தின் மேற்குக் கடற்கரையிலிருந்து டப்ளினுக்கு அழைத்து வந்தது. எங்கள் தந்தை டப்ளினில் இசைக்குழுத் தலைவராக இருந்தார். அவர் நடன அரங்குகளுக்குச் சென்றபோது எங்கள் தாயைச் சந்தித்திருக்கலாம். அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது" என்கிறார். அந்த உறவு இவ்வளவு நீண்ட காலம் நீடித்திருந்தால், அவர்கள் ஒருவரையொருவர் காதலித்திருக்க வேண்டும் என்று மெக்பிரைட் நம்புகிறார். ஆனால், அது சிக்கலான உறவாக இருந்தது. அவர்களது தந்தை ஏற்கெனவே திருமணமானவர். மேலும், அவர் சீர்திருத்த கிறிஸ்தவர் (protestant); அவர்களது தாயோ கத்தோலிக்கர். அயர்லாந்து மத ரீதியான பிளவுகளால் உறுதியாகப் பிரிந்திருந்ததுடன், சமூக ரீதியாகவும் பழமைவாதமாக இருந்த அந்தக் காலகட்டத்தில், அவர்கள் பல தடைகளை மீறியிருக்க வேண்டும் என்று டேவிட் கருதுகிறார். "கத்தோலிக்கர், சீர்திருத்த கிறிஸ்தவர். திருமண உறவைக் கடந்து பிறந்த குழந்தைகள்... அவர்களுக்கு என்ன நம்பிக்கை இருந்திருக்க முடியும்?" என்று அவர் கேட்கிறார். பட மூலாதாரம், Helen Ward இருப்பினும், நம்ப முடியாத வகையில் இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. பல ஆண்டுகளாகத் தனது தேடலின்போது படித்த ஒரு செய்தியை ஹெலன் வார்டு நினைவுகூர்ந்தார். அது அவருக்கு ஒரு கேள்வியை எழுப்பியது. தங்களுடன் உடன்பிறந்த இன்னொருவர் இருக்க முடியுமா? "1965-ம் ஆண்டு ஒரு தொலைபேசிக் கூண்டில் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக அந்தச் செய்தி கூறியது" என்று கூறும் அவர், "அந்தக் குழந்தை ஒரு பையில் இருந்தது. அதனுடன் வெதுவெதுப்பான பால் புட்டியும் இருந்தது. ஆகவே, அந்தக் குழந்தையின் கதையில் இருந்த அனைத்துத் தகவல்களும் என்னுடைய கதையிலும் டேவிட்டின் கதையிலும் இடம்பெற்றிருந்தன" என்கிறார். மெக்பிரைடும் ஹெலன் வார்டும் இணைந்து தங்களது தேடலைப் பற்றி உருவாக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஆஸ்திரேலியாவில் வசித்த இளம்பெண் ஒருவர் பார்த்தார். அதன்பிறகு, அயர்லாந்தைச் சேர்ந்த தனது தந்தையான ஜான் குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார். அவர் உண்மையிலேயே மெக்பிரைடுக்கும் வார்டுக்கும் உடன்பிறந்த சகோதரர் என்பது தெரியவந்தது. "அவர் மூன்று பேரில் நடுப்பிள்ளை" என்று விளக்கும் ஹெலன் வார்டு, "நாங்கள் மூவரும் அமர்ந்து சந்தித்தபோது, அது நம்ப முடியாத ஓர் அனுபவமாக இருந்தது. உங்கள் குடும்பத்தினரைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. ஆனால், அந்தத் தருணம் மாயாஜாலம் போன்றதாக இருந்தது" என்கிறார். பட மூலாதாரம், Helen Ward பதிலளிக்கப்படாத இந்தக் கேள்விகளும், தங்களது பெற்றோருடன் பேசப்படாமல் போன விஷயங்கள் குறித்த நினைவுகளும், ஒருபோதும் நிரப்ப முடியாமல் போகக்கூடிய ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக ஹெலனும் டேவிட்டும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், தங்களது தாய் எடுத்த முடிவுகளைத் தங்களால் குறை கூற முடியாது என்று ஹெலனும் டேவிட்டும் கூறுகின்றனர். "தனது மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்த சிறிது காலத்திலேயே கைவிடுவது அவருக்கு எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும்" என்பதை ஹெலன் விவரிக்கிறார். "அது அவருக்கு மிகவும் கொடுமையான அனுபவமாக இருந்திருக்க வேண்டும்" என்று ஹெலன் கூறுகிறார். வயதான நிலையில் இருந்த தங்களது தாய், ஒரு பொம்மையை இறுகப் பற்றிக்கொண்டு அதை விட மறுக்கும் காணொளியைப் பார்த்ததை டேவிட் நினைவுகூர்கிறார். "'இவள்தான் என் குழந்தை. நான் மூன்று குழந்தைகளை இழந்துவிட்டேன். இதையும் என்னிடமிருந்து நீங்கள் பறித்துக்கொள்ளப் போவதில்லை" என்று அவரது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், அவரது மனம் இப்படிச் சொல்லியிருக்குமோ என்று நான் நினைக்கிறேன்". இந்தச் செய்தி பிபிசி உலகச் சேவையின் 'அவுட்லுக்' நிகழ்ச்சியின் ஓர் அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை