நரிக்குறவ மக்களின் வலிகளைப் பேசும் சிங்காரம்: திரை விமர்சனம்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நரிக்குறவ மக்களின் வலிகளைப் பேசும் சிங்காரம்: திரை விமர்சனம்

இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ள சிங்காரம் திரைப்படத்தின் விமர்சனக் கட்டுரை சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் ஒடுக்கப்படும் நரிக்குறவர் இன மக்களிலிருந்து ஒருவர் கோடீஸ்வரனாகி தன்னுடைய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பது எப்படி சாத்தியமானது என்பதே சிங்காரம் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கே வி கதிர்வேலு இயக்கியுள்ளார். யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். அவருடன் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மாரிமுத்து, வேலராமமூர்த்தி, தீபா, சென்ராயன் என பலர் நடித்துள்ளனர். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். 1990-களில் நடக்கும் இந்தக் கதைக் களத்தில் பஞ்சம் பிழைக்க நாடோடிகளாக வரும் எம். எஸ் பாஸ்கர் தலைமையிலான நரிக்குறவர் இனக் கூட்டத்தினர் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியை அடைகின்றனர். அவர்களுக்கு, ஊரின் களத்து மேட்டுப் பகுதியில் தங்கியிருந்து பஞ்சம் பிழைக்க அனுமதி அளிக்கிறார் ஊர் தலைவரான வேல ராமமூர்த்தி. எனினும் அவர்களை சாதிய பாகுபாட்டோடு நடத்துகின்றனர் உள்ளூர் அரசியல்வாதியின் தம்பியான சென்ராயனும் அவரது அடியாட்களும். இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கர் வாங்கிய லாட்டரிக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழ கோடீஸ்வரனாகிறார் சிங்காரம் எனும் யோகி பாபு. அதன் பின் என்ன ஆனது என்பதே சிங்காரம் திரைப்படத்தின் எஞ்சிய கதை. சமூகத்தில் நரிக்குறவர் இன மக்கள் சந்திக்கும் அன்றாட இன்னல்களை காட்சியில் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கதிர்வேலு. மருத்துவமனையில் அனுமதி கிடைக்காதது, உணவிற்காக தவிப்பது, சாதிய பாகுபாட்டோடு அணுகுவது என நரிக்குறவர் இன மக்கள் அனுபவிக்கும் அன்றாட சிக்கல்களை திரையில் கடத்தி இருக்கிறார். முதல் பாதியில் அம்மக்களின் கொட்டகைகளும், ஊசி மணி பாசிமணிகளின் விற்பனை மூலம் அவர்களின் வறுமையை தெளிவாக காட்ட முடிந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி யோகி பாபுவின் திடீர் கோடீஸ்வர மாற்றம், ஊருக்காக உழைப்பது, அரசியல் பிரவேசம் என வழக்கமான சினிமா தளங்களுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. நரிக்குறவர் இன மக்களின் இந்த வளர்ச்சி பேசப்பட வேண்டியது எனினும் திரை மொழியாக அதைக் கடத்த இயக்குநர் தவறி இருக்கிறார். முதல் பாதி முழுக்க பில்டப்களால் உருவாக்கப்பட்ட சென்ராயனின் வில்லத்தனம் இரண்டாம் பாதியில் எடுபடவில்லை. யோகி பாபுவின் இடை சேர்க்கப்பட்ட காதல் கதையும் கதைக்குள் எடுபடவில்லை. நாயகனாக நடித்துள்ள யோகி பாபு தன்னுடைய வழக்கமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகர் யோகி பாபுவின் நடிப்பு வழக்கமானதாக உள்ளது. இரண்டாம் பாதியில் சாதியால் ஒடுக்கப்படும் போது கூனிக் குறுகி நிற்கும் நரிக்குறவர் இன மக்களில் ஒருவனாக கவனிக்க வைக்கிறார். அவருடன் நடித்துள்ள வேல ராம மூர்த்தியின் கதாபாத்திரம் யதார்த்தமாக உள்ளது. இளவரசு, தீபா, மனோபாலா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். சாம் சி எஸ்-இன் பின்னணி இசை பெரிய அளவில் விடுபடவில்லை. பிரசன்னாவின் ஒளிப்பதிவு கதையை நிலை நிறுத்துவதில் கை கொடுத்திருக்கிறது. நரிக்குறவர் இன மக்கள் சமூகத்தில் அவமரியாதையுடன் நடத்தப்படுவது தொடர்பாக பொது சமூகத்தின் கவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சிங்காரம் திரைப்படம் பாதிக் கிணறு தாண்டிய மண்டேலா. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை