தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து நஸ்ரியா பேச்சு... நடிகை நஸ்ரியா நீண்ட காலமாகத் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தது குறித்து பேசியுள்ளார். நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவ. 6 ஆம் தேதி வெளியாகிறது. முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யாவின் வேகமான டிக்கெட் விற்பனை என்றும் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பாளர்கள் கூறி வருகின்றனர். சீன் நன்றாக இருந்தால் வணிக ரீதியாக ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்பதால் சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், கொச்சியில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகை நஸ்ரியா, “நான் நீண்ட காலமாகத் தமிழில் நடிக்கவில்லை. காரணம், கடந்த 12 ஆண்டுகளாக நான் எதிர்பார்த்து காத்திருந்த கதையும் கதாபாத்திரமும் என்னைத் தேடி வரவில்லை. அதனால்தான், தமிழ்த் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார். நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற நஸ்ரியா இறுதியாக 2014-ல் திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்துடன் தமிழில் நடிப்பதை நிறுத்தினார். நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யாவுடன் சீன் திரைப்படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நஸ்ரியா 12 அண்டுகளாகத் தமிழில் நடிக்காததற்கு காரணம் இதுதானா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗