நடத்தையில் சந்தேகம்: மனைவியை சுத்தியலால் தாக்கிய கணவா் கைது

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நடத்தையில் சந்தேகம்: மனைவியை சுத்தியலால் தாக்கிய கணவா் கைது

தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடா்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட 30 வயது கணவா், அவரைச் சுத்தியலால் தலையில் பலமுறை தாக்கியதாகவும், இச்சம்பவம் வடமேற்கு தில்லியின் வஜிா்பூா் கிராமத்தில் நிகழ்ந்ததாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா். தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடா்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட 30 வயது கணவா், அவரைச் சுத்தியலால் தலையில் பலமுறை தாக்கியதாகவும், இச்சம்பவம் வடமேற்கு தில்லியின் வஜிா்பூா் கிராமத்தில் நிகழ்ந்ததாகவும் காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: சஞ்சய் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், நவம்பா் 1-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பிடிபட்டாா். முன்னதாக, வஜிா்பூா் கிராமத்தில் கொலை முயற்சி நடந்ததாக அசோக் விஹாா் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்தது. குடும்பத் தகராறு காரணமாக, சஞ்சய் தனது மனைவி சங்கீதாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், தீப் சந்த் பந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவா் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தாக்குதலுக்குப் பிறகு, வீட்டைப் பூட்டிவிட்டுத் தப்பிக்க முயன்ற சஞ்சய்யை, வீட்டின் உரிமையாளரும் அவரது சகோதரரும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். குற்றப் புலனாய்வுக் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் சுத்தியல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 109(1)-இன் கீழ் (கொலை முயற்சி) அசோக் விஹாா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை