நவ.1-ல் தில்லியில் தமது வலிமையை காட்டுகின்ற வகையில் அனைவரும் அணி திரள்வோம்: மாணிக்கம் தாகூர்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நவ.1-ல் தில்லியில் தமது வலிமையை காட்டுகின்ற வகையில் அனைவரும் அணி திரள்வோம்: மாணிக்கம் தாகூர்

தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் நிர்வாகிகளும் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அழைப்பு குறித்து... மாணிக்கம் தாகூர் - கோப்புப்படம் சென்னை: தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை கண்டித்து நவ. 1 ஆம் தேதி இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள வரலாறு காணாத பேரணிக்கு தமிழக காங்கிரசின் வலிமையை காட்டுகின்ற வகையில் அனைவரும் அணி திரண்டு வரும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி - அமித்ஷா ஆலோசனையின் பேரில் தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ்குமாருடன் இணைந்து கூட்டு சதித் திட்டம் தீட்டி செயல்பட முடிவெடுத்தனர். இதன்படி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் ஏறத்தாழ 13 கோடி வாக்காளர்களை நீக்கி அதன்மூலம் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்தது நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அம்பலப்படுத்தப்பட்டது. விமர்சனத்திற்கு உள்ளானது தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை முதன் முதலில் எழுப்பியவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தான். தொடர்ந்து இக்குற்றச்சாட்டுக்களை மக்கள் மன்றத்தில் எழுப்பியதால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. வரலாறு காணாத பேரணி தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை கண்டித்து தலைநகர் தில்லியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னணியில் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் வரலாறு காணாத பேரணியை தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வாக்கை காப்போம் - நாட்டை காப்போம் என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கின்ற வகையில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. தில்லி பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வணிகர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அணி திரண்டு வரும்படி தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். 10 லட்சம் பேர் திரள்வோம் நவம்பர் 1 இல் ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணி ஆளுங்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால், பேரணி நடைபெறுவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த தடைகளை உடைத்து குறைந்தபட்சம் 10 லட்சம் பேரை திரட்டுகிற தீவிர முயற்சியில் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் பெருந்திரளானோரை அணிதிரட்டுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வழிகாட்டுதலின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஒருங்கிணைப்புப் பணியின் மூலமாக பேரணி மிகப்பெரிய வெற்றியடைவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் தில்லியில் நவம்பர் 1 இல் நடைபெறும் பேரணியின் குறிக்கோள் மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலக வேண்டும், சிறப்பு தீவிர திருத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தேர்தல் ஆணைய இணையதளம் புதுப்பிக்கப்பட வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும், அதன் விவரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும், பிகார், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், தில்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து சுயேட்சையான மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி ஓயாது மேற்கூறிய கோரிக்கைகள் நிறைவேறுகிற வரை எந்தவிதமான திருத்தமும், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளக் கூடாது. இதுவே தில்லியில் நடைபெறுகிற பேரணியில் தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கப்படுகிற கோரிக்கையாகும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது, தலைவர் ராகுல்காந்தி ஓயமாட்டார். தேர்தல்கள் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை தடுத்து நிறுத்தாமல் தேர்தல்கள் நியாயமாக, நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், தேர்தல் ஆணையம் மோடி - அமித்ஷா - ஞானேஷ்குமார் ஆகியோரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். வலிமையை காட்டுவோம் இந்த நோக்கத்தில் தில்லியில் நடைபெறுகிற பேரணிக்கு தமிழகத்திலிருந்து பெருந்திரளானவர்கள் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். உடனடியாக இன்றே தலைநகர் தில்லியை நோக்கி அணி அணியாக புறப்படுவோம். தில்லியில் தமிழக காங்கிரசின் வலிமையை காட்டுகின்ற வகையில் அனைவரும் அணி திரண்டு வரும்படி மீண்டும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை