காலி மது பாட்டில்களுக்கான ரூ. 10 கட்டணம், நிர்ணய விலையுடன் சேர்க்கப்பட்டது குறித்து... காலி மது பாட்டில்களுக்காக ரூ. 10 வசூல் - பிரதிப் படம் தமிழகத்தில் காலி மது பாட்டில்களின் ரூ. 10 கட்டணம், நிர்ணய விலையுடன் சேர்க்கப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் வழக்கம் இருந்து வருகிறது. காலி பாட்டிலை திரும்பப் பெறுவதற்காக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்பட்டு, பாட்டில்களை திருப்பி அளிப்பதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் ரூ. 10 பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில், காலி மது பாட்டிலுக்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 10 கட்டணத்தை, வருகிற நவம்பர் 1 முதல் அந்தந்த மதுபானங்களின் நிர்ணய விலையுடன் சேர்த்தே விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான மதுபானங்களின் விலையுடன் ரூ. 10-யும் எம்ஆர்பி-யில் (MRP) சேர்க்கப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் தொடர்பான அறிவிப்பை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நவம்பர் 1 முதல் மது பாட்டில்கள் விலை ரூ.10 உயர்வு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗