நீலகிரியில் '150க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மண் சரிவில் சிக்கிய பேருந்து' - தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் நிலவரம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
நீலகிரியில் '150க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மண் சரிவில் சிக்கிய பேருந்து' - தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் நிலவரம்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. பர்லியாரில் அதிகபட்சமாக 25 செ.மீ மழையும் கீழ் கோத்தகிரியில் 20 செ.மீ மழையும் எடப்பள்ளியில் 16 செ.மீ மழையும் பெய்துள்ளது. மாற்றுப் பாதையாக கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் பொது மக்கள் பயணிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்புத் துறையினர் சாலையில் ஏறப்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பர்லியார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக்கப் வாகனம் மண் சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வாகனத்தில் யாராவது இருந்தார்களா என்று தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். பிக்கப் வாகனத்தை மீட்கும் பணியிலும் வருகின்றனர். உதகை பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலம் அருகே 4 அடிக்கு மேல் சாலையில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் இந்த சாலை வழியாக உதகை படகு இல்லத்திற்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. End of அதிகம் படிக்கப்பட்டது மேலும் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே காவல் நிலையத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது. குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்றின் மீது மரங்கள் விழுந்து மண் சரிவில் சிக்கியது. பேருந்தில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்தார். படுகாயமடைந்த நடத்துநர் கேசவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீட்டுகள் பகுதியில் இன்று காலை 100 அடி நீளமும் 30 அடி உயரமும் கொண்ட தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் காவலாளி வெங்கடேஷ் சிக்கிக்கொண்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கின. மேலும் ஆறு இருசக்கர வாகனங்களும் ஒரு பேட்டரி காரும் மண்ணில் புதைந்தன. இடர்பாடுகளைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் சிக்கிய 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை மீட்புப் படையினர் கயிறு கட்டி மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுற்றுலா வந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயணித்த பேருந்து மண் சரிவில் சிக்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், மாணவ, மாணவிகளைக் கயிறு கட்டிப் பாதுகாப்பாக மீட்டனர். மஞ்சூர் - கோவை சாலையில் பாறை ஒன்று சரிந்து சாலை நடுவே விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் உதவியுடன் பாறையை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சியில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மாநகரப் பகுதிகளான கண்டோன்மென்ட், உறையூர் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மேலப்புதூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளான தீரன் நகர், சத்திரப்பட்டி, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மழைப்பொழிவு பதிவானது. திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கிய மழைநீரில் அரசுப் பேருந்து ஒன்று சிக்கியது. அப்போது என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் பேருந்து பழுதாகி நின்றது. உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகள் பத்திரமாகக் கீழே இறக்கி விடப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் கண்மாய் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. மழை காரணமாகத் தற்காலிகமாக அந்தப் பணிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கண்மாயில் விட்டுச் செல்லப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம் இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கியது. அதன் மேற்பகுதி மட்டும் சற்று வெளியே தெரிந்துள்ளது. ஹிட்டாச்சி இயந்திரத்தை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, கப்பலில் பயன்படுத்தப்படும் இரும்புச் சங்கிலியைக் கட்டி பின்னர் கண்மாய்க் கரையில் இருந்த மற்றொரு ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் கரைக்கு இழுக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் முக்கிய சுற்றுலா தலங்களான முக்கடல் சங்கமம், திற்பரப்பு அருவி மற்றும் லெமூர் கடற்கரை இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கோவைக் குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் மகேந்திர கிரி மலையில் மழை அதிகரித்துள்ளதால் பரளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிக்கரை‌ பகுதியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள்: பிரபுராவ் ஆனந்தன், சிவக்குமார், பா.சுதாகர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை