‘நீதி வழங்கும் நடைமுறைகள் மக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தக் கூடாது’ - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
‘நீதி வழங்கும் நடைமுறைகள் மக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தக் கூடாது’ - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

சென்னையில் நடந்த தேசிய கருத்தரங்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நேற்று தொடங்கி வைத்தார். உடன், பாதிக்கப்பட்டோர் நீதி அறக்கட்டளைத் தலைவர் பி.ஜோதிமணி, சென்னை பல்கலை. முன்னாள் துறைத் தலைவர் திலகராஜ், உதவிப் பேராசிரியர் எஸ்.லதா, பல்கலை. பதிவாளர் ரீட்டா ஜான். சென்னை: நீதி வழங்​கும் நடைமுறைகள் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மன உளைச்​சலையோ, அதிர்ச்​சியையோ ஏற்​படுத்​தக் கூடாது என உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்​மாதி​காரி தெரி​வித்​தார். சென்னை பல்​கலைக்​கழகத்​தின் குற்​றவியல் துறை, சர்​வ​தேச பாதிக்​கப்​பட்​டோர் நீதி அறக்​கட்​டளை, அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் சைபர் ஸ்​பேஸ் சட்​டம் மற்​றும் நீதித்​துறை, சென்னை டிஜிட்​டல் ஃபாரன்​சிக் மையம் ஆகியவை இணைந்து ‘பாதிக்​கப்​பட்​டோருக்​கான நீதி: சிக்​கல்​கள் மற்​றும் சவால்​கள்’ என்ற தலைப்​பிலான இரு நாள்தேசிய கருத்​தரங்​கங்கை சென்னை பல்​கலைக்​கழகத்​தில் நேற்று நடத்தின. பாதிக்​கப்​பட்​டோர் நீதி அறக்​கட்​டளைத் தலை​வரும் ஓய்வுபெற்ற நீதிப​தி​யுமான பி.ஜோதி​மணி தலை​மையில் நடை​பெற்ற இக்​கருத்​தரங்​கை தொடங்கி வைத்து உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்​மாதி​காரி பேசியதாவது: சட்​டத்​தின் வரலாறு பழிவாங்​குதல் என்ற நிலை​யி​லிருந்து குற்​றத்தடுப்பு முறைகளைக் கடந்து, தற்​போது மறு​வாழ்வு மற்​றும் மீட்பு என்ற உயரிய நிலையை எட்​டியுள்​ளது. இந்​திய அரசி யலமைப்​புச் சட்​டத்​தின் 39ஏ மற்றும் 21-வது பிரிவு​கள் மனித மாண்​பையும், அனைவருக்​கும் சமமான சட்ட உதவியையும் உறுதி செய்​கின்​றன. நீதி வழங்​கும் நடைமுறைகள் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மனஉளைச்​சலையோ, அதிர்ச்​சி​யையோ ஏற்​படுத்​தக் கூடாது. சட்ட நடைமுறைகளுக்கு அப்​பால் மனிதாபிமானமும் இரக்​கமும் நீதித்​துறை​யின் அடிப்​படைப் பண்​பு​களாக இருக்க வேண்​டும். காவல்​துறையும் நீதித்​துறையும் பரஸ்பர புரிதலுடனும் மனித நேயத்​துடனும் இணைந்து செயல்​பட்​டால் மட்​டுமே, நீதி​மன்​றங்​கள் அச்​சத்தை ஏற்​படுத்​தும் இடங்​களாக இல்​லாமல், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் காயங்​களை ஆற்றும் பாது​காப்​பான இடமாக மாறும். இவ்​வாறு அவர் பேசினார். இந்​நிகழ்ச்​சி​யில் சென்​னைப் பல்​கலைக்​கழக குற்​றவியல் துறை முன்​னாள் தலை​வரும் டிஜிட்​டல் தடய​வியல் சிறப்பு மைய இயக்​குநரு​மான தில​க​ராஜ், குற்​றவியல் துறை உதவிப் பேராசி​ரியரும், இணை​ய​வழி தடய​வியல் மற்​றும் தகவல் பாது​காப்பு மையத்​தின் பொறுப்பு இயக்​குநரு​மான எஸ்.லதா, பல்​கலைக்​கழக பதிவாளர் ரீட்டா ஜான், தமிழ்​நாடு டாக்​டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் சைபர் ஸ்​பேஸ் சட்​டம் மற்​றும் நீதித்​ துறை​யின் தலை​வர் டாக்​டர் ரஞ்​சித் உம்​மன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இந்நிகழ்வில் சட்ட வல்​லுநர்​கள், தடய​வியல் நிபுணர்​கள்,வழக்​கறிஞர்​கள், காவல் துறை அதி​காரி​கள், மாணவர்​கள் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை