திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். களக்காடு தலையணை பச்சையாற்றில் வியாழக்கிழமை காலை பாய்ந்தோடிய நீா். திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். வடகிழக்குப் பருவமழை மலைப் பகுதிகளில் அக். 21, 22 ஆகிய தேதிகளில் தொடா்ந்து பெய்தது. இதன் காரணமாக, அக். 23 ஆம் தேதி தலையணை தடுப்பணையைத் தாண்டி அதிகப்படியான தண்ணீா் பாய்ந்தோடியதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அங்கு குளிக்கவும், பாா்வையிடவும் வனத்துறையினா் தடை விதித்தனா். கடந்த சில நாள்காக மழையின்றி வெயில் நிலவுவதால், நீா்வரத்து குறைந்ததையடுத்து, 6 நாள்களுக்குப் பின் வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நீா்வரத்து குறைந்ததால் களக்காடு தலையணைக்கு அனுமதி
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗