நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த முறை பெரும்பான்மையை பெற தவறிவிட்டார். எனவே, அவர் பிரதமராக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த மாற்றம் இஸ்ரேலில் இன்னும் தீவிர வலதுசாரி சித்ததாந்தை கொண்ட தலைவர்களைதான் ஆட்சிக்கு வர வைத்திருக்கிறது. இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் நெதன்யாகுவின் வலதுசாரி கட்சி, 53 இடங்களிலும் அவருக்கு போட்டியாக களம் இறங்கிய.. ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி, 48 இடங்களிலும்.. பாலஸ்தீன் அரபு கட்சிகள், முன்னேபோதும் இல்லாத வகையில் 19 இடங்களிலும் வென்றிருக்கின்றன. நெதன்யாகு மீது கடந்த காலங்களில் மிகப்பெரிய அளவுக்கு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருந்தன. அவருக்கு எதிராக, நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக 2023 அக்.7 ஹமாஸ் தாக்குதலை நெதன்யாகு தடுக்க தவறிவிட்டார் என்று நாட்டு மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இது தவிர இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்டுள்ள போர் காரணமாக, கடுமையான பொருளாதார நெருக்கடியும், வேலைவாய்ப்பு நெருக்கடிகளும் ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஆனால், இந்த தேர்தலில் இவர் மீது அதிருப்தி இருந்தும் கூட.. மக்கள் இடதுசாரி பக்கம் நகரவில்லை. குறிப்பாக இஸ்ரேலின், இளம் தலைமுறையினர்.. முதியோர்களை விட அதிக வலதுசாரி சிந்தனை கொண்டவர்களாக மாறி வருகின்றனர் என்பது தெளிவாக தெரிவதாக, 'தி கார்டியன்' இதழில் செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மக்கள் தொகையில் 20% இருக்கும் பாலஸ்தீன வாக்காளர்களை, தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக நெதன்யாகு சித்தரித்தார். அவரைப் பொறுத்தவரை, வலதுசாரி அல்லது பாலஸ்தீனம் என்பது தான் முதன்மை முழக்கமாகும். பாலஸ்தீனர்களை வஞ்சகர்களாகவும், இரு நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பவர்களாகவும் காட்டும் இந்த இனவாத யுக்தி.. யூத எதிர்ப்பு தாக்குதலில் பயன்படுத்தப்படும் அதே பாணியாகும். இதெல்லாம் கடுமையான இனவாத பிரிவினை வார்த்தைகள், முழக்கங்கள் என்று மக்களுக்கு தெரிந்திருந்தாலும் கூட.. அவர்கள் வலதுசாரி கட்சிகளைதான் ஆதரித்திருக்கின்றனர். இந்த போக்கு, வளர்ந்து வரும் இளைஞர்களின் சிந்தனை குறித்து.. பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இஸ்ரேலில் மட்டும் கிடையாது, மற்ற பல நாடுகளிலும்.. குறிப்பாக நேபாளத்தை எடுத்துக்கொண்டால், அங்கு நடந்த இளைஞர்களின் தீவிர போராட்டத்திற்கு பிறகு.. ஆட்சியில் இருந்தவர்கள் அகற்றப்பட்டார்கள். ஆனால், ஆட்சியில் தீவிர வலதுசாரியாளர்கள் வந்தார்கள். அதாவது மக்களுக்கு பிரச்சனை இருப்பது தெரிகிறது. ஆனால், அந்த பிரச்சனைக்கான மாற்று தலைவர்கள் யார்? என்பதை தீர்மானிப்பதில் ஒற்றுமை இல்லாததால்.. வலதுசாரிகள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கூற்று இஸ்ரேலுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியதாகும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை