நெதன்யாகுவிற்கு சாதகமாகும் களம்.. இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? 5 விஷயங்கள் நடக்க வாய்ப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
நெதன்யாகுவிற்கு சாதகமாகும் களம்.. இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? 5 விஷயங்கள் நடக்க வாய்ப்பு

டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அடுத்த பிரதமர் யார்? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேலில் அடுது்து நடக்கப்போகும் சாத்தியமான 5 விஷயங்களில் பெரும்பாலானவை பிரதமர் பதவியை மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு கைப்பற்றும் வகையில் உள்ளன. அதுபற்றி இங்கு பார்க்கலாம். இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 120 இடங்களில் 61 இடங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி, கூட்டணி மெஜாரிட்டியும் கிடைக்கவில்லை. பிரதான கூட்டணிகளான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்களும், 'யாஷர்' கட்சியின் காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு 48 இடங்களும், அரபுகட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன. பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காடி ஐசன்கோட் ஆகியோரில் ஒருவர் அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் எளிதாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். ஆனால் இருவரும் அரபு கட்சிகளை அரவணைக்க தயங்குகின்றனர். இஸ்ரேல் யூத நாடாக இருப்பதால் அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்க இருவரும் தயங்கி வருகின்றனர். இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல் ஆட்சியை பிடிப்பது யார்? அடுத்த பிரதமர் யார்? என்பதில் 5 விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதில் பெரும்பாலானவை தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தான் சாதகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி மட்டும் 27 இடங்களை கைப்பற்றி உள்ளது. எதிர்க்கட்சியான காடி ஐசென்கோட்டின் 'யாஷர்' கட்சி 21 இடங்களை தான் கைப்பற்றி உள்ளது. இதனால் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த கூட்டணி அரசை அமைக்கலாம். நெதன்யாகு தனது கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சியான காடி ஐசன்கோட்டின் யாஷர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்கி பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராகலாம். இந்த முதல் விஷயத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளாவிட்டால் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்ளலாம். 50:50 என்ற முறையில் முதல் பாதியில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராகவும், 2வது பாதியில் எதரி்க்கட்சிகளின் கூட்டணி தலைவராக இருக்கும் காடி ஐசன்கோட் பிரதமராகலாம் என்று டீல் பேசவும் வாய்ப்புள்ளது. மெஜாரிட்டிக்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களை கைப்பற்றி உள்ளது. மெஜாரிட்டிக்கு இன்னும் 7 இடங்கள் தான் தேவை. இதனால் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள எம்பிக்களை தன்பக்கம் இழுக்க வாய்ப்புள்ளது. இஸ்ரேல் வரலாற்றில் பெஞ்சமின் நெதன்யாகு தான் நீண்டகால பிரதமராக செயல்பட்டு வருகிறார். அதோடு திறமையான அரசியல்வாதியாகவும், இக்கட்டான சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் திறமையை கொண்டுள்ளார். இதனால் நெதன்யாகு, எதிர்க்கட்சிகளின் எம்பிக்களை தன்பக்கம் இழுத்து ஆட்சியை கைப்பற்றலாம். இந்த 3 விஷயங்களும் இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு வருவதற்கு சாதகமாக உள்ளன. எதிர்க்கட்சியான காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டிக்கு 13 இடங்கள் குறைவாக உள்ளன. அரபு கட்சிகளுக்கு 19 இடங்கள் உள்ளன. இதனால் அரபு கட்சிகளின் ஆதரவில் காடி ஐசென்கோட் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. பெஞ்சமின்நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தான் அரபு கட்சிகளின் முக்கிய கொள்கையாக உள்ளது. இதனால் நாங்கள் காடி ஐசென்கோட் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குகிறோம் என்று அறிவிக்கலாம். இது நடந்தால் காடி ஐசென்கோட் பிரதமராகலாம். இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. அதன்பிறகு ஆட்சி அமைக்க மொத்தம் 30 நாட்கள் வழங்கப்படும். இதில் அரசியல் கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதலாக 15 நாட்கள் வழங்கப்படும். அதிலும் எந்த கூட்டணியும் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் மறுதேர்தல் நடத்தப்படும். இந்த மறுதேர்தல் முடிவுகள் வெளியாகி அடுத்த பிரதமர் பொறுப்பேற்கும் வரை பெஞ்சமின் நெதன்யாகு தான் தொடர்ந்து பிரதமராக பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை