நெதன்யாகுவிற்கு வாய்ப்பிருக்கா? ‘கிங் மேக்கராக' மாறும் அரபு கட்சிகள்! இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
நெதன்யாகுவிற்கு வாய்ப்பிருக்கா? ‘கிங் மேக்கராக' மாறும் அரபு கட்சிகள்! இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?

டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவரான காடி ஐசென்கோட் ஆகியோரில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் இஸ்ரேல் அரசியலில் அரபு கட்சிகள் கிங்மேக்கர்களாக உருவாகி உள்ளன. இவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ? அவர்களால் எளிதாக பிரதமராக முடியும். இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. மொத்தமுள்ள 120 இடங்களில் ஆட்சியை பிடிக்க 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதான கூட்டணிகளான 'லிகுட்' கட்சியின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'யாஷர்' கட்சியின் காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனாலும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காடி ஐசன்கோட் கூட்டணி பின்தங்கி உள்ளது. மொத்தமுள்ள 120 இடங்களில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களுடன் முன்னிலையில் உள்ளது. காடி ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் இஸ்ரேலில் அடுத்த அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் அரபு கட்சிகள் 'கிங் மேக்கர்' ஆக மாறி உள்ளன. ஏனென்றால்இந்த அரபு கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றி உள்ளன. இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீன வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல சிறிய அரபு கட்சிகள் இணைந்து 'தி ஜாயிண்ட் லிஸ்ட்' என்ற பெயரில் கூட்டணி வைத்துள்ளன.இந்த கூட்டணிக்கு யூசெஃப் ஜபரின் தலைமை வகிக்கிறார். இந்த 'தி ஜாயிண்ட் லிஸ்ட்' கூட்டணி 12 இடங்களை கைப்பற்றி உள்ளது. மற்றொறு கட்சியின் பெயர் 'ராம்'. இதனை பொதுவாக இஸ்லாமிய கட்சி என்பார்கள். இதற்கு மன்சூர் அப்பாஸ் தலைமை தாங்குகிறார். இந்த கட்சி 7 இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த கட்சிகளின் ஆதரவை பெற்றால் எளிதாக பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காடி ஐசன்கோட் ஆகியோரால் ஆட்சியை பிடிக்க முடியும். பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 53 இடங்கள் உள்ள நிலையில் இந்த 2 கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் அது 72 இடங்களாக அதிகரிக்கும். அதேபோல் எதிர்க்கட்சியான காடி ஐசன்கோட் கூட்டணிக்கு 49 இடங்கள் உள்ளன. இந்த 2 அரபு கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் 68 இடங்களாக அதிகரிக்கும். மெஜாரிட்டிக்கு 61 இடங்கள் தான் தேவை என்பதால் எளிதாக ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காடி ஐசன்கோட் ஆகியோர் அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இஸ்ரேலில் உள்ள யூதர்கள் அரபு கட்சிகளை சேர்ந்தோருக்கு பதவி வழங்க விரும்புவது இல்லை. இதனால் அரபு கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது எதிர்காலத்தில் பிரச்சனையாக மாறலாம் என்பதால் பெஞ்சமின் நெதன்யாகு, காடி ஐசன்கோட் ஆகியோர் கூட்டணி வைக்க தயங்கி வருகின்றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை