புரட்டாசி மாத தேய்பிறை பதினைந்து நாட்கள் “மகாளய பட்சம்” அல்லது “பித்ரு பட்சம்” என்று அழைக்கப் படுகிறது. இந்த நாட்களில், முன்னோர்கள் பூமிக்கு வந்து, தங்கள் சந்ததியினரின் நினைவை எதிர்பார்ப்பதாக பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. அந்தப் பதினைந்து நாட்களின் இறுதி நாளான அமாவாசையே ``சர்வமகாளய அமாவாசை’’ ஆகும். இந்த நாளில் தர்ப்பணம், அன்னதானம், முன்னோர் வழிபாடு... மஹாளய பட்சம்: 27-9-2026 முதல் 10-10-2026 வரை மஹாளய பட்சம் 27.9.2026 ஞாயிற்றுக்கிழமை 10.10.2026 அமாவாசை வரை நடைபெறும். மஹாளயம் என்றால் “பெரிய கூட்டம்” என்று பொருள். இந்த 15 நாட்களில் நமது பித்ருக்கள் அதாவது மறைந்த முன்னோர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நமது இல்லங்களுக்கு எழுந்தருளு வதாக ஐதீகம். இந்த 15 நாட்களும் முன்னோர்களுக்கு எள்,... அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் ஸ்ரீமந் நாராயணன். சுமார் ஆறாயிரம் ஆண்டு களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலியுகத்திலே `சப்தகிரி’ என போற்றப்படும் ‘ஏழுமலையிலே’ ஸ்ரீ வெங்கடாஜலபதியாக எழுந்தருளியிருக்கிறார். திருமலை திருப்பதியில் ஏழுமலையான் எழுந்தருளியுள்ள திருக்கோலத்திலேயே, தமிழ்நாட்டில் ஏழு திருத்தலங்களில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அவ்வாறு ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியுள்ள ஏழு திருத்தலங்களை சுருக்கமாக... முழு முதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனை வரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரிய தடைகள் யாவும் நீங்கும். *விநாயகர் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களை பொழிகின்றார். சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய... நட்சத்திரங்களின் ரகசியங்கள் - கிருத்திகை 27 நட்சத்திரங்களில் மூன்றாவதாக வருவது கிருத்திகை. பரணிக்குப் பிறகு வரும் இந்த நட்சத்திரம், நெருப்பு, வீரியம், துணிவு, ஞானம், சுத்திகரிப்பு ஆகிய பல ஆழமான தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டது. கிருத்திகை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது முருகப் பெருமான். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகப் பெருமானுடன் கிருத்திகை... வரலட்சுமி விரதம்: 21.8.2026 - வெள்ளிக்கிழமை ஒருவருடைய வாழ்வு எல்லா விதத்திலும் சிறக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு அவசியமானது செல்வம். “பொருளாதாரம்” என்றால் வாழ்வின் ஆதாரமாக பொருள் இருக்கிறது என்று பொருள். அந்தப் பொருளுக்கு ஆதார சக்தியாக விளங்குவதால் மகாலட்சுமியை எல்லோரும் வணங்குகிறார்கள். ‘‘வந்தாள் மகாலட்சுமியே’’ என்று இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள். அதிகாலையில்... சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் ஆவணி மாதத்தில், மகாலட்சுமியை இல்லத்திற்கு வரவேற்கும் மங்களகரமான விரதமாக வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையே வரலட்சுமி விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. திதி மாறலாம்; தேதி மாறலாம்; நட்சத்திரமும் யோகங்களும் ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடும்.... ஆனித் திருமஞ்சனம் : 22-6-2026 1. ஆனியும் மார்கழியும் இந்து தர்மத்தில் காலக் கணக்கீடு என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல, அது பிரபஞ்ச விதிகளுடனும் இறை வழிபாட்டுடனும் நெருங்கிய தொடர்பு டையது. மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்: தை முதல் ஆனி வரை (உத்தராயணம்) தேவர்களின் பகல் பொழுது. இதில் ஆனி மாதம்... சத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்.... இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
வழிபாடு முறைகள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinakaran.com (original report) ↗