நிகழாண்டு வடகிழக்கு பருவமழை 35% அதிகம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நிகழாண்டு வடகிழக்கு பருவமழை 35% அதிகம்

தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருமழை கடந்த அக். 15-ஆம் தேதி தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடா்ச்சி மழை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவே மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில், கடந்த அக். 1 முதல் வெள்ளிக்கிழமை (அக். 30) வரை இயல்பாக 165.6 மி.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், நிகழாண்டு 217.9 மி.மீ. மழை அதாவது 32 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இயல்பைவிட அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, கோவையில் 101 சதவீதமும் (313.4 மி.மீ), திருவள்ளூா் - 79 (258.7 மி.மீ.), திண்டுக்கல் - 74 (328 மி.மீ.), காரைக்கால் - 70 சதவீதமும் (434.9 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வழக்கமாக 260 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், 296 மி.மீ. அதாவது 3 சதவீதம் அதிகமாக மழை பதிவானது. குறைந்தபட்சமாக தென்காசியில் 27 சதவீதம் (119.1 மி.மீ.), செங்கல்பட்டு - 13 (193.1 மி.மீ.), திருப்பூா் - 12 (130.2 மி.மீ.), புதுக்கோட்டை - 2 (129.9 மி.மீ.) மழை குறைவாகப் பதிவானது. பெட்டிச் செய்தி... புயல் சின்னம் வலுப்பெறும் தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் நிகோபாா் தீவுகள், அந்தமான் கடலில் சனிக்கிழமை (அக். 31) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதையடுத்து அடுத்த 2 நாள்களில் இந்தப் புயல் சின்னம் மேற்கு - வடமேற்கு திசையில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பு: இதன்காரணமாக, சனிக்கிழமை (அக். 31) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், நவ.1-ஆம் தேதி வடக்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புகா் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.31) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை