ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 60 ஓவர்களுக்குப் பிறகு எடுத்த விக்கெட் குறித்து... விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாட் கம்மின்ஸ் உடன் ஆஸி. வீரர்கள். - AFP தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 372 பந்துகளுக்குப் பிறகு தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளார். பாட் கம்மின்ஸ் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் அவரது நீண்ட பந்துகளுக்குப் பிறகு எடுத்த விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 429 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோஷ் இங்லீஷ் சதம் அடித்து 102 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது 16ஆவது ஓவரில் பாட் கம்மின்ஸ் விக்கெட் எடுத்தார். இதுவரை 210 ரன்களைக் கொடுத்திருக்கிறார். கடைசியாக டிரிஸ்டன் ஸ்டப்ஸை முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுத்திருந்தார். தற்போது, மூன்றாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது 75 ஓவர்களில் 202/5 ரன்கள் எடுத்து 102 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. களத்தில் ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர் விளையாடி வருகிறார்கள். ஸ்டார்க் 2, ஹேசில்வுட், கம்மின்ஸ், லயன் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிம்மதி பெருமூச்சு விட்ட பாட் கம்மின்ஸ்..! 372 பந்துகளுக்குப் பிறகு முதல் விக்கெட்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗