நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விலகியுள்ளதைப் பற்றி... பிரசித் கிருஷ்ணா - ஷுப்மன் கில். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விலகியுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி வருகிற நவ. 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது போட்டியில் காயத்தால் விலகினார். அவர் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில், அவர் ஐந்து போட்டிகள் கொண்ட நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக நியூசிலாந்தில் உள்ள ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி, அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக அவருக்கு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வலுவான பேட்டிங்குடன் ஒப்பிடுகையில், பந்து வீச்சு மிகவும் வலிமை குறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. அர்ஷ்தீப் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஆகிப் நபி மூவரும் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மூவரும் சேர்ந்து வெறும் 20 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியிருக்கும் வேளையில், 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜின் எதிர்காலம் என்ன? என்பது குறித்த கேள்விகளும் எழுந்திருக்கின்றன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗