நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்துக்கான இந்தியா ஏ அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது சிராஜ். - படம் | AP நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்துக்கான இந்தியா ஏ அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிரதான டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் தங்களுக்குள் அதிகாரபூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்தத் தொடரில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி நாளை (அக்டோபர் 31) கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. ð¨ News ð¨Prasidh Krishna ruled out of ODI series.Mohd. Siraj will join the India A squad for the 2nd four-day game.Nitish Kumar Reddy will link up with the India A squad for the 3rd four-day gameMore details ð½ | #TeamIndia | #NZvIND https://t.co/qGIF5AL2uG இந்த நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்தியா ஏ அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ள பிரசித் கிருஷ்ணா மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நிதீஷ் குமார் ரெட்டியும் மூன்றாவது போட்டிக்கான இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணி விவரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், யஷ் ரத்தோட், ஆர். சமரன், துருவ் ஜுரெல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஷிகர் மோகன், முகேஷ் சௌதரி, முகேஷ் குமார், மானவ் சுதர், குமார் குஷாக்ரா. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியில் முகமது சிராஜ் சேர்ப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗