நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா தெரிவித்துள்ளார். திலக் வர்மா - படம் | பிசிசிஐ நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், நான்காவது டி20 போட்டி நாளை (அக்டோபர் 30) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் திடலில் நடைபெறுகிறது. இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வெல்லும் என திலக் வர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் அதிரடியாக விளையாடக் கூடிய வீரர். மூன்றாவது வீரராக களமிறங்கியபோதும், நன்றாக விளையாடி ரன்கள் குவித்துள்ளேன். தற்போது 5-வது அல்லது 6-வது இடத்தில் களமிறங்கும்போது, முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் எப்போதும் ஒரு ரன் அல்லது இரண்டு ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவேன். இறுதிக்கட்ட ஓவர்களில் பேட்டரைக் காட்டிலும் பந்துவீச்சாளரே அதிகப்படியான அழுத்தத்தில் இருப்பார். அப்போது அவர்கள் அதிக ரன்களை வழங்கக் கூடும். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு. தொடரை முழுமையாகக் கைப்பற்றி இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும் என நினைக்கிறோம் என்றார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என வெல்வோம்: திலக் வர்மா
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗