தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டா மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பூப் பறிக்க முயன்றபோது பால்கனியிலிருந்து தவறி விழுந்த 40 வயது நபா் மற்றும் அவரது 11 வயது மகன் உயிரிழந்தனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா். தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டா மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பூப் பறிக்க முயன்றபோது பால்கனியிலிருந்து தவறி விழுந்த 40 வயது நபா் மற்றும் அவரது 11 வயது மகன் உயிரிழந்தனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து மத்திய நொய்டா காவல் துணை ஆணையா் பிரவீன் ரஞ்சன் சிங் கூறியதாவது: உயிரிழந்தவரின் மனைவி அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ‘காட்டு ஷியாம்’ கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனா். கோயிலில் சமா்ப்பிப்பதற்காகப் பூக்களைப் பறிக்க, அவரது கணவரும் மகனும் பால்கனிக்குச் சென்றிருந்தனா். அப்போது அவா்கள் ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் கௌா் சிட்டி 2-இல் உள்ள ‘மஹாகுன் மைவுட்ஸ்’ குடியிருப்பில், பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்தது. உயிரிழந்தவா்கள் ரந்தீப் பத்ரா மற்றும் அவரது மகன் ஆரவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் அங்கு மருத்துவா்கள் அவா்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினா். வெள்ளிக்கிழமை காலை, காவல் அவசரகால வாகனத்தின் மூலம் காவல்துறைக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது. காவல்துறையினா் சம்பவத்தின் விசாரணையை முடித்து, இறந்த இருவரது உடல்களையும் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனா் என்றாா் அவா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நொய்டா: பால்கனியிலிருந்து தவறி விழுந்த தந்தை, 11 வயது மகன் உயிரிழப்பு - பூ பறிக்க முயன்றபோது சம்பவம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗