ஜெயிலர் - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக... ஜெயிலர் 2 பட போஸ்டர் - படம்: எக்ஸ் / சன் பிக்சர்ஸ் இயக்குநர் நெல்சன் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது. கடந்த அக். 15 ஆம் தேதி உலக அளவில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ. 820 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழ் சினிமாவின் நம். 1 வசூல் திரைப்படமாக மாறியுள்ளது. ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே, இரண்டாம் பாகத்துக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவ. 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓடிடியில் ஜெயிலர் - 2 எப்போது?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗