ஒன்பிளஸ் டேப், ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி அதிரடி சலுகைகள்! என்னென்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஒன்பிளஸ் டேப், ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி அதிரடி சலுகைகள்! என்னென்ன?

தீபாவளியையொட்டி ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து... தீபாவளியையொட்டி ஒன்பிளஸ் நிறுவனத்தில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், கையடக்கக் கணினி (டேப்), இயர் பட்ஸ் உள்ளிட்டவற்றிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் வங்கிச் சலுகைகள், வட்டியில்லா தவணைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒன்பிளஸ் நிறுவனத்தில் ஸ்மார்ட்போன், கையடக்கக் கணினி (டேப்), இயர் பட்ஸ் உள்ளிட்டப் பொருள்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் இணையதளப் பக்கம், அமேசான், ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளம் மற்றும் ஒன்பிளஸ் சில்லறை விற்பனைக் கடைகளில் இந்தச் சலுகைகள் கிடைக்கும். ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலை ரூ. 84,999. வங்கிச் சலுகையாக ரூ. 3,000 கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் ரூ. 81,999க்கு இதனைப் பெற முடியும். பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ. 37,600 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெற முடியும். இதனால் ரூ. 60,000க்கு ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை பெற முடியும். ஒன்பிளஸ் 15 ஆர் ஸ்மார்ட்போன் 256 GB + 12 GB உள்நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் ரூ. 69,999. எஸ்பிஐ வங்கி அட்டையைப் பயன்படுத்தி வாங்கினால், ரூ. 6,500 சலுகை வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டால் ரூ. 46,750க்கு இந்த ஸ்மார்ட்போனை பெறலாம். ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளப் பக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு 6 விலை ரூ. 47,999. எஸ்பிஐ வங்கிக் கடன் அட்டையைப் பயன்படுத்தினால் ரூ. 3,000 தள்ளுபடி கிடைக்கும். இந்தச் சலுகைகள் மூலம் ரூ. 36,400க்கு ஒன்பிளஸ் நார்டு 6-ஐ பெற முடியும். ஒன்பிளஸ் பேட் 4 விலை சலுகையுடன் ரூ. 62,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிச் சலுகை ரூ. 4,500. ஒன்பிளஸ் பேட் லைட் சலுகை விலையுடன் ரூ. 22,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் அட்டை மூலம் ரூ. 2,000 கூடுதல் தள்ளுபடி பெறலாம். ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 சலுகை விலை ரூ. 8,999. ஒன்பிளஸ் பட்ஸ் 4 சலுகை விலை ரூ. 5,399. ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 4 ப்ரோ சலுகை விலை ரூ. 3,599. ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 4 சலுகை விலை ரூ. 2,699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை