ஊராட்சித் தேர்தலை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
ஊராட்சித் தேர்தலை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் ஊராட்சிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவற்றை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க கால வரம்பு நிர்ணயித்து தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்வாக காரணத்தை கூறி அரசியலமைப்பு அளித்துள்ள உத்தரவாதத்தை, அரசு மீற முடியுமா எனவும் தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ள அவர், இது தொடர்பாக, கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 243-E பிரிவின்படி ஊராட்சிகளின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்றும், அடுத்த ஊராட்சியை அமைப்பதற்கான தேர்தல் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்புடைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறி, அதற்கு முன்பே சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்றும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகளை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடைமுறையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டபோது அமலில் இருந்த சட்டப்பூர்வ அதிகாரம் எது என்பதையும் மனுதாரர் கேள்விக்குட்படுத்தியுள்ளார். வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டுப் பணிகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, தேர்தலை ஒத்திவைப்பது சட்டப்படி நியாயமல்ல என்றும், பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மட்டும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மற்ற பகுதிகளில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டுப் பணிகளை முடித்து, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் ஊராட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை