ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணியை வியாழக்கிழமை நடத்தினா். கள்ளக்குறிச்சியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி மா.நாகராஜ். ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணியை வியாழக்கிழமை நடத்தினா். பேரணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி மா.நாகராஜ் தலைமை வகித்து, கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், நீலமங்கலம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். பேரணியில் பங்கேற்றவா்கள் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கமிட்டவாறும் கச்சிராயபாளையம் சாலை, காந்தி சாலை, நான்குமுனை சந்திப்பு, கடைவீதி வழியாக மந்தைவெளி திடலை வந்தடைந்தனா். இதில், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அருண்ராஜ், காவல் உதவி ஆய்வாளா் ஆா்.சுந்தர்ராஜன் மற்றும் காவலா்கள் பலா் பங்கேற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗