ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. அரியலூரில் கல்லாப்பெட்டியில் கை வைத்த பெண்.. நம்ப முடியாத ட்விஸ்ட்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. அரியலூரில் கல்லாப்பெட்டியில் கை வைத்த பெண்.. நம்ப முடியாத ட்விஸ்ட்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் தனியார் பேக்கரி கடையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண், கடைசியில் சிசிடிவி காட்சியில் சிக்கி இருக்கிறார். அந்த பெண்மணியை கடைக்காரர் பொறிவைத்து பிடித்தார். இதையடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி.. எப்போது குற்றம் செய்தவர்கள் தப்பித்துக்கொண்டே இருக்க முடியாது. அதேபோல் குற்றம் செய்தவர்கள் அப்போது தப்பினாலும், கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக்கொள்வார்கள் என்பது இயற்கை நியதி. அப்படி சிக்கும் கொள்ளையர்கள், திருட்டு பெண்கள், வாழ்நாள் முழுக்க கொள்ளையடித்து சேர்த்த பணத்தை பறிகொடுப்பதுடன், உல்லாச வாழ்க்கையையும் தொலைத்து கடைசியில் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். இன்றைய சூழலில் சிசிடிவி உள்ள பகுதிகளில் மாட்டிக்கொள்ளாமல் திருடுவது என்பது மாட்டுக்கொம்பில் பல் கறப்பதற்கு சமமாக மாறி வருகிறது. ஏனெனில் திருடியவர்களை சிசிடிவி கேமராக்களை வைத்து பின் தொடர்ந்தாலே சிக்கி கொள்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அங்கும் சிசிடிவி இருப்பதால் சிக்கி கொள்கிறார்கள். எனவே தான் சிசிடிவி கேமராக்களை பொறுத்துமாறு போலீசார் வலியுறுத்துகிறார்கள். அரசும் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி திருட்டு நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்றைக்கு பல்வேறு கடை உரிமையாளர்களுமே திருட்டை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொறுத்தி வருகிறார்கள். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா பழூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் பேக்கரி கடையில் மதிய நேரத்தில் தொடர்ந்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டு வருவதாக தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் யார் திருடுவது என தெரியாமல் இருந்துள்ளார். எனினும் தொடர்ந்து திருட்டுச் சம்பவம் நடந்த நிலையில் திருட்டு ஈடுபட்ட நபர் சிக்கவில்லை. இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட பேக்கரி உரிமையாளர் கடைக்கு சிசிடிவி பொருத்தியுள்ளார். வழக்கம்போல் மதிய நேரத்தில் கடையில் யாரும் இல்லாத போது கல்லாப்பெட்டியில் இருந்து பணம் திருடப்பட்டது தெரிய வந்தது இதனை அடுத்து கடையிலிருந்த சிசிடிவி கேமராவை கடை உரிமையாளர் ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 600 ரூபாய் தொகையினை எடுத்துச் சென்றது சிசிடி காட்சியில் பதிவாகியது. பின்னர் பல்வேறு இடங்களில் அந்தப் பெண்மணி குறித்து தேடிவந்துள்ளார். இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் அந்தப் பெண்மணி மீண்டும் கடைக்கு வந்து கல்லாவிலிருந்து பணத்தை திருடன் முயற்சித்துள்ளார் உடனடியாக அருகில் இருந்த நபர்கள் மற்றும் கடை உரிமையாளர் அந்தப் பெண்மணியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் பெண்மணி யார் எந்தப் பகுதியை சேர்ந்தவர் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடிக்கடி திருடி சிக்காமல் இருந்த பெண், சிசிடிவி காட்சியால் சிக்கி கொண்டதால் ஒரே அசிங்கமாக போச்சு குமாரு என்பது போல் முகபாவணைகளை வெளிப்படுத்தினார். அது தொடர்பான வீடியோ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை