ஒரே ஓவரில் 32 ரன்: இந்தியாவிடம் ஹாட்ரிக் தோல்வியடைந்த நியூசிலாந்து முதல் வெற்றி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
ஒரே ஓவரில் 32 ரன்: இந்தியாவிடம் ஹாட்ரிக் தோல்வியடைந்த நியூசிலாந்து முதல் வெற்றி

பட மூலாதாரம், Getty Images ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, நியூசிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நான்காவது போட்டியில் சரணடைந்தது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான அபிஷேக் சர்மா, சாம்சன் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆக்லாந்து டி20 இல் இந்தியா எங்கே தடுமாறியது? டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. கடந்த மூன்று போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் டாஸை வென்றார். இந்த டி20 தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் வென்று 3-0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்த இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக மயங்க் யாதவும், சூர்யவன்ஷிக்குப் பதிலாக இஷான் கிஷனும் அணியில் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்குப் பதிலான நேதன் ஸ்மித் சேர்க்கப்பட்டார். முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஃபின் ஆலன் ஆட்டமிழந்திருக்க வேண்டியது. பவுண்டரி லைனில் பிரின்ஸின் அபார கேட்ச் முயற்சி கைகொடுக்காததால் அவர் தப்பித்தார். நான்கு பந்துகளுக்குப் பிறகு மயங்க் யாதவ் பந்துவீச்சில் அப்பர் கட் அடிக்கப் போய், அதே பிரின்ஸிடம் கேட்ச் கொடுத்து மற்றொரு ஓபனர் டிம் சைஃபர்ட் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம், Getty Images தனது ஓவரை 6, 6, 4, 4 என சிதறடித்த டேரில் மிட்செலையும் அதிவேக யார்க்கரின் மூலம் பெவிலியனுக்கு அனுப்பினார் மயங்க் யாதவ். வழக்கமாகப் பொறுமையாக இன்னிங்ஸைத் தொடங்கும் கிளென் பிலிப்ஸ், எடுத்த எடுப்பில் அதிரடி மோடை ஆன் செய்தார். பிரின்ஸ் வீசிய பவர்பிளேவின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 14 ரன்களைக் குவித்தார். நியூசிலாந்து அணி பவர்பிளே முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை குவித்தது. ஏழாவது ஓவரை வீசிய அக்சர் படேலை 4,6,6 என வரவேற்ற ஃபின் ஆலன், அதே ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசினார். நியூசிலாந்தின் ரன் குவிப்பைத் தடுப்பதற்காக 11 ஆவது ஓவரை வீச மயங்க் யாதவை அழைத்தார் ஸ்ரேயஸ் ஐயர். கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக, அபாரமான பவுன்சரின் மூலம் பெவோன் ஜேக்கப்பின் விக்கெட்டை வீழ்த்தினார் மயங்க். End of அதிகம் படிக்கப்பட்டது அக்சர் படேல் வீசிய 14 ஆவது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 19 ரன்களை பிரேஸ்வெல் குவித்தார். நிதிஷ் குமார் ரெட்டியின் மூன்றாவது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் உள்பட 32 ரன்களை பிலிப்ஸ் சேர்த்தார். சிறிய மைதானம் என்பதால் முழு நீளத்தில் வீசப்பட்ட பந்துகளை எளிதாக லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் அவர் விளாசினார். பிரேஸ்வெல்லின் 3 அதிரடி சிக்ஸர்கள் உதவியுடன், மயங்க் வீசிய ஆட்டத்தின் 17வது ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு நியூசிலாந்து அணிக்கு கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 10 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் குவித்த பிலிப்ஸ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை எடுத்தது. முதல் போட்டியில் 230 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்கியது. டஃபி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மிட் ஆஃப் திசையில் பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார் சாம்சன். ஆனால், டஃபி ஷார்ட்டாக வீசிய அடுத்த பந்திலேயே விக்கெட் கீப்பர் சைஃபர்ட்டிடம் கேட்ச் கொடுத்து சாம்சன் ஆட்டமிழந்தார். இரண்டு பந்துகளுக்குப் பிறகு ரன் ஏதுமெடுக்காமல் இஷான் கிஷனும் டஃபிடமே கேட்ச் கொடுத்து காட் & பவுல்ட் முறையில் அவுட்டானார். முதல் ஓவரிலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால், அணியை மீட்கும் பொறுப்பு கேப்டன் ஸ்ரேயஸ் தோள்களில் இறங்கியது. முதல் 4 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மென்கள் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடக்கி வாசித்த அபிஷேக் சர்மா, ஐந்தாவது ஓவரில் ஃபிஷர் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். இந்திய ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில், ஃபிஷர் வீசிய பந்தில் மிட் ஆஃபில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். ரன் ரேட் அழுத்தம் அதிகரித்ததால், இந்திய பேட்டர்கள் அவசரப்பட்டு விளையாடி ஆட்டமிழந்ததைப் பார்க்க முடிந்தது. பட மூலாதாரம், Getty Images பவர்பிளேயின் கடைசி ஓவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்த ஸ்ரேஸ் ஐயர், தனது ஸ்டம்புகளை பறிகொடுத்தார். அவர் 11 பந்துகளில் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 22 ரன்கள் எடுத்தார். 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்ல, ஸ்மித் வீசிய எட்டாவது ஓவரில் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் நிதிஷ்குமார் ரெட்டி. ஆனால். அடுத்த ஓவரிலேயே நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் 4 பந்துகள் இடைவெளியில் நிதிஷ் குமார், அக்சர் படேல் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த போதும், அடுத்து களமிறங்கிய நமன் தீர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். ஃபிஷரின் மூன்றாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் பறக்கவிட்டார். விக்கெட்டுகளை இழந்தாலும் இந்தியாவின் ரன் ரேட் நல்ல நிலையில் இருந்தது ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தது. ஆனால், நமன் தீரின் அதிரடி நீண்ட நேரத்துக்குத் தாக்குப்பிடிக்கவில்லை. 13 பந்துகளில் 28 ரன்கள் குவித்த அவர், டஃபியின் பந்துவீச்சில் ஸ்மித்திடம் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே அர்ஷ்தீப் சிங் பேக்வர்ட் பாயிண்ட்டில் ஜேக்கப்பிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 12 முதல் 15 ஓவர்கள் வரை இந்திய அணி மொத்தமாக 13 ரன்களை மட்டுமே எடுத்தது. தோல்வி உறுதி என்றான நிலையில், கடைசிக்கட்ட பேட்டர்கள் பேட்டிங் பிராக்டிஸ் போல போட்டியை அணுகினர். ஆக்லாந்து மைதானத்தில் பவுன்ஸ் இருந்ததால் பந்து நன்றாக எகிறியது. உயரமான நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பட மூலாதாரம், Getty Images 16 ஆவது ஓவரில் மில்னே பந்தில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய திலக் வர்மா, 17 ஆவது ஓவரில் ஸ்மித் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரை விளாசினார்.35 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த அவர், 19 ஆவது ஓவரில், ஃபிஷர் பந்துவீச்சில் சைஃபர்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் கிடைக்க இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து, 87 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டஃபி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சதமடித்த கிளென் பிலிப்ஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை