ஒர்னாப் புயலால் ஆந்திர மாநிலத்துக்கு ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு... ஒர்னாப் புயலால் ஆந்திர மாநிலத்துக்கு ரூ.4,600 கோடி இழப்பு என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு... - கோப்புப் படம் | PTI ஒர்னாப் புயலின் பாதிப்புகளால் ஆந்திரப் பிரதேசத்துக்கு குறைந்தது ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல், ஆந்திரம் - யானம் இடையே கடந்த புதன்கிழமை (அக். 28) அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயலினால், ஆந்திரம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கோனசீமா மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்பு செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒர்னாப் புயலால் ஆந்திரம் மாநிலம் முழுவதும் குறைந்தது ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, ஆந்திரத்தில் ஒர்னாப் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழுவை நியமிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, புயலின் பாதிப்புகள் குறித்து ஆந்திர அரசு முதல்கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மத்திய குழு ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பப்படுவார்கள் என மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், புயலினால் கோனசீமா மாவட்டத்தில் சுமார் 8,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், அவற்றை சீரமைக்கக் கூடுதலாக தெலங்கானா மாநிலத்தில் இருந்து 1,000 மின்சாரப் பணியாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாகவும், முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும், ஒர்னாப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் கோனசீமா மாவட்டங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, நீரில் மூழ்கிய பயிர்களுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஒர்னாப் புயலால் ஆந்திரத்தில் 7 பேர் பலியானதுடன், சுமார் 57,000 பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒர்னாப் புயலால் ரூ.4,600 கோடி இழப்பு, மத்திய குழு நாளை ஆய்வு! - ஆந்திர முதல்வர் அறிவிப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗