ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானது பற்றி.... ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஒன்பது மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதாக பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ரபி நாராயண் நாயக் தெரிவித்தார். 'ஒர்னாப்' புயலின் தாக்கத்தால் பெய்த பலத்த மழையின் காரணமாக, ரைகியா தொகுதிக்கு உட்பட்ட டங்கேசி கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர் கூறினார். தீயணைப்புப் படையினர் இருவரை உயிருடன் மீட்டனர். பலியானவர்கள் அச்சுதா பிரதான் (30) மற்றும் அவரது மனைவி அனிஷா பிரதான் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குழந்தையின் பெயர் வெளியிடப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அப்பகுதியில் உள்ள இடிபாடுகளை அகற்றுவதற்காக பேரிடர் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் நாயக் தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒடிசாவில் நிலச்சரிவு: ஒன்பது மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗