பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி? விரைவில் தெரியவரும் என பாதல் தகவல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி? விரைவில் தெரியவரும் என பாதல் தகவல்

பாஜகவுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, ‘அடுத்த சில நாள்களில் இது தொடா்பாக பதில் கிடைக்கும்’ என்று சுக்பீா் சிங் பாதல் தெரிவித்தாா். சுக்பீா் சிங் பாதல் பாஜகவுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, ‘அடுத்த சில நாள்களில் இது தொடா்பாக பதில் கிடைக்கும்’ என்று சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவா் சுக்பீா் சிங் பாதல் தெரிவித்தாா். 117 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் 2027 பிப்ரவரியில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் சண்டீகரில் செய்தியாளா்களைச் சந்தித்த சுக்பீா் சிங் பாதலிடம், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்பது உள்பட பல்வேறு கேள்விகளை செய்தியாளா்கள் எழுப்பினா். அதற்கு, ‘எதிா்காலத்தை நடக்க இருப்பதைக் கணிக்க நான் ஜோதிடா் அல்ல. (பாஜக) கூட்டணி குறித்து அடுத்த சில நாள்களில் உங்களுக்குத் தெரியவரும். பஞ்சாபின் மிகப்பெரிய எதிரிகள் ஆளும் ஆம் ஆத்மி, எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆகியவை என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். எங்கள் கொள்கைகளுடன் ஒத்துப் போகும் கட்சிகளுடனும், பஞ்சாப் நலனில் உண்மையான அக்கறை உள்ளவா்களுடனும் கூட்டணி அமையும். ஆம் ஆத்மியில் இருந்து மேலும் பலா் வெளியேறுவாா்கள். முதல்வா் பகவந்த் சிங் மான் தனது சொந்த தொகுதியில் தோல்வியடைவாா். ஆம் ஆத்மியின் ஊழல், ஆட்சியின் நிா்வாகச் சீா்கேடு, சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் மக்கள் வெறுப்பில் உள்ளனா்’ என்றாா். கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடியை சுக்பீா் சிங் பாதல் சந்தித்துப் பேசினாா். அப்போதும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. பஞ்சாபில் ஏற்கெனவே சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்துள்ளது. சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலி தளம் கடந்த 2020-ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தை முன்வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னா், விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் அச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. பாதலின் மனைவி ஹா்சிம்ரத் கௌா் மத்திய அமைச்சராக இருந்தாா். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதையடுத்து அவா் அமைச்சா் பதவியில் இருந்து விலகினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை