பாகிஸ்தானில் அவசர ஊர்தியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் பலியானது குறித்து... பாகிஸ்தானில் அவசர ஊர்தியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் பலி - கோப்புப் படம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அவசர ஊர்தியில் (ஆம்புலன்ஸ்) ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் சுமார் 10 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தின் தார்பார்கர் மாவட்டத்தில், வியாழக்கிழமை (அக். 29) அதிகாலையில் அரசு மருத்துவமனையின் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவசர ஊர்தியில் திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்தச் சம்பவத்தில், ஊர்திக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நோயாளி, அவரது உறவினர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட 10 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் அந்த அவசர ஊர்தி தீப்பற்றி எரியும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரைக் கதிகலங்கச் செய்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்குத் தனது இரங்கல்களைத் தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, இதற்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் ஏசி வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் பலியாகின. இதனால், பாகிஸ்தானின் மருத்துவக் கட்டமைப்புகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக, ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாகிஸ்தானில் அவசர ஊர்தியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடிப்பு! 10 பேர் பலி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗