தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் படத்திற்கான இசையமைப்பாளர் குறித்து... பாக்கெட் நாவல் போஸ்டர், ஜிவி பிரகாஷ் - படங்கள்: எக்ஸ் / டைலர்டர்டன், ஜிவி பிரகாஷ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஏற்கெனவே, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாகுமென தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இளையராஜா இசையில் உருவாக இருந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, இணையத் தொடர் ஒன்றில் தியாகராஜா குமாரராஜாவின் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. Itâs official !! @gvprakash is onboard for Thiagarajan Kumararajaâs #PocketNovel .#ThiagarajanKumararaja @VijaySethuOffl @MalavikaM_ @RajbShettyOMK #ActorKishore @dhilipaction @tylerdurdenand1 #NiravShah @andrewxvasanth @Emadhi161 @just_cut_it @YugabhaarathiYb @artdir_raja pic.twitter.com/Q82VSsDPwh தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாக்கெட் நாவல் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗