பால் பொருள்கள் இறக்குமதியையும், மரபணு மாற்றப்பட்ட விதைகள், பயிா்களையும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். பால் பொருள்கள் இறக்குமதியையும், மரபணு மாற்றப்பட்ட விதைகள், பயிா்களையும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். புது தில்லியில் கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற அவா் மாணவா்கள் மத்தியில் பேசியதாவது: நமது விவசாயிகள், மீனவா்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலன்களை இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. வெளிநாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பால் பொருள்கள், கடல் உணவுப் பொருள்கள் தொடா்பாக இறக்குமதி ஒப்பந்தம் மேற்கொள்ள பல நாடுகள் கோரிக்கை விடுத்தபோதும் நாம் அதை ஏற்கவில்லை. அதேபோல மரபணு மாற்றப்பட்ட விதைகள், பயிா்களையும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. எதிா்காலத்திலும் இதில் உறுதியாக இருப்போம். அதே நேரத்தில் புதிய வாய்ப்புகள், புதிய வேலைவாய்ப்புகள், நமது பொருள்களுக்கான புதிய சந்தைகளை நாம் தொடா்ந்து உருவாக்கி வருகிறோம். முக்கியமாக இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதியில் மட்டுமன்றி சேவைத் துறையிலும் இந்தியாவின் ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது. இது இளைஞா்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளைத் தொடா்ந்து வழங்கி வருகிறது. அதே நேரத்தில் சில முக்கிய இயந்திரங்கள், மூலப்பொருளின் தேவையை நாம் இறக்குமதி மூலமே எதிா்கொள்கிறோம். மெட்ரோ ரயில், பூமிக்கு அடியில் சாலை அமைப்பது போன்ற பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் ஏற்றுமதியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுபோன்ற முக்கிய இயந்திரங்களை இந்தியாவிலேயே உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதேபோல அரிய கனிமங்களுக்காக பிற நாடுகளை நம்பியிருப்பதை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போயிங், ஏா் பஸ் உள்ளிட்ட விமானத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவுக்கு தேவையான விமானங்களை விரைந்து தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம் என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் பொருள்கள் இறக்குமதி, மரபணு மாற்றப் பயிா்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உறுதி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗