பதப்படுத்தப்படாத பால் குடிப்பது உடலுக்கு பாதுகாப்பானதா? அறிவியல் உண்மை என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
பதப்படுத்தப்படாத பால் குடிப்பது உடலுக்கு பாதுகாப்பானதா? அறிவியல் உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images பதப்படுத்தப்படாத பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் பால் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையைத் தடுப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது வரை அனைத்தையும் செய்யக் கூடியது என்று கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இதுகுறித்த கூகுள் தேடல்கள் பிரிட்டன், அமெரிக்காவில் கணிசமாக அதிகரித்துள்ளன. இன்ஸ்டாகிராமில் பதப்படுத்தப்படாத பால் தொடர்பான சுமார் 2.6 லட்சம் பதிவுகள் உள்ளன. மேலும், அதிகம் அறியப்பட்ட சமூக ஊடக பிரபலங்கள் பலரும் அதன் நன்மைகளைப் பிரபலப்படுத்தி வருகின்றனர். அப்படியென்றால், பதப்படுத்தப்படாத பால் மீது அனைவருக்கும் இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டிருப்பது ஏன்? பிரிட்டனில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்வதற்கும், அதன் சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதற்கும் வெப்பமூட்டிப் பதப்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்படாத பால், கிரீம் ஆகியவை மாடு, செம்மறியாடு, ஆடு ஆகியவற்றில் இருந்து பெறப்படுகின்றன. இவை எந்தவிதப் பதப்படுத்தும் முறைக்கும் உட்படுத்தப்படாமல், விலங்குகளிடம் இருந்து நேரடியாக பாட்டில்களில் நிரப்பப்படுகின்றன. க்வினெத் பேல்ட்ரோ போன்ற பிரபலங்கள், காய்ச்சாத பால் எளிதில் செரிமானமாகக்கூடும் என்று கூறியுள்ளனர். மேலும், அதன் சுவை சிறந்ததாக இருப்பதாகவும், அதிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவும் சமூக ஊடகங்களில் அடிக்கடி புகழப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images பால் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எனப் பல ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதால் பலர் அதைப் பருகுகின்றனர். சில வைட்டமின்கள் வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடியவை என்பதால், பாலைப் பதப்படுத்தும்போது அதிலுள்ள வைட்டமின்களின் அளவு குறையக்கூடும் என்று சிலர் கவலைப்படுகின்றனர். ஆனால், கனடாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, பாலில் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய வைட்டமின்கள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே இருப்பதால், பாலைப் பதப்படுத்துவது அதன் ஊட்டச்சத்து மதிப்பில் மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. End of அதிகம் படிக்கப்பட்டது இருப்பினும், பாலைப் பதப்படுத்தும் முறை பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களும், உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் அடங்கும். சமீபத்தில் பாலிமலோ குக்கரி பள்ளியில் தங்கிப் படித்த மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருள்களை உட்கொண்டவர்களின் குடல் நுண்ணுயிரிகளின் அமைப்பில் வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களின் நல்வாழ்வு தொடர்பான சுய மதிப்பீடுகளிலும் வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால், இந்த ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டது என்பதால், பதப்படுத்தப்படாத பால் உட்கொள்வதுதான் இந்த மாற்றங்களுக்குக் காரணம் என்று உறுதிப்படுத்த முடியாது. மேலும், பதப்படுத்தப்படாத பால் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதையும் இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை. அதேநேரத்தில், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் அபாயங்களும் தொடர்ந்து நீடிக்கின்றன. சில கண்காணிப்பு ஆய்வுகள், குறிப்பாக விவசாயக் குடும்பங்களில் வசிக்கும் குழந்தைகள் தொடர்பான ஆய்வுகள், பதப்படுத்தப்படாத பால் குடிப்பதற்கும் ஆஸ்துமா மற்றும் சில ஒவ்வாமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதற்கும் இடையே தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளன. ஆனால், இந்த ஆய்வுகள் பதப்படுத்தப்படாத பால்தான் இதற்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தவில்லை. வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு காரணிகளும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் பதப்படுத்தப்படாத பால் குடிப்பதைத் தவிர்க்குமாறு ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பிரிட்டனின் உணவுத் தர நிர்ணய முகமை, பச்சை பால் அல்லது பதப்படுத்தப்படாத பாலை குடிப்பதற்கான பால் மற்றும் கிரீம் ஆகியவற்றை "அதிக ஆபத்துள்ள உணவுப் பொருள்" என்று வகைப்படுத்தியுள்ளது. மேலும், அவற்றில் "உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்" என்றும் எச்சரித்துள்ளது. கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் "இதை உட்கொள்ளக் கூடாது" என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. "உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, பச்சைப் பால் குடிப்பது பாதுகாப்பானது அல்ல" என்று உணவு நுண்ணுயிரியல் துறையின் மூத்த விரிவுரையாளரான மருத்துவர் ஜார்ஜ் குட்டிரெஸ்-மெரினோ கூறுகிறார். "பதப்படுத்தப்படாத பாலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் இருக்கலாம். உயிருக்கு ஆபத்தான சில பாக்டீரியாக்களும் அதில் இருக்கக்கூடும். குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அவை உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்த்தொற்றுகளை உண்டாக்கலாம்." பிரிட்டன், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில், பதப்படுத்தப்படாத பால் விற்பனை செய்யப் பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் கடுமையான சுகாதாரம் மற்றும் உடல்நலம், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், இதற்கான விதிமுறைகள் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படுகின்றன. பண்ணைகள் வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்யப்படுகின்றன. அங்கு வளர்க்கப்படும் கால்நடைகள் ஆரோக்கியமாகவும், புருசெல்லோசிஸ் மற்றும் காசநோய் ஆகிய நோய்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அபாயத்தைக் குறைத்தாலும், தீவிரமான நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதால் பதப்படுத்தப்படாத பால் குடிப்பதைத் தவிர்க்குமாறு பிரிட்டனின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பாலைப் போலல்லாமல், பதப்படுத்தப்படாத பசும்பாலை பிரிட்டன், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட பண்ணைகளில் மட்டுமே விற்பனை செய்ய முடியும். பண்ணை நுழைவாயில்களில் நேரடியாகவும், தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலமாகவும், இணையம் வாயிலாகவும், விவசாயிகள் சந்தைகளிலும் அல்லது பால் விநியோக வாகனங்கள் மூலமாகவும் இதை விற்பனை செய்யலாம். ஸ்காட்லாந்தில் பதப்படுத்தப்படாத பால் பொருள்களை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை