பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்..! வழுக்கி விழுந்து மரணம்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்..! வழுக்கி விழுந்து மரணம்?

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானது குறித்து... பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா - படம்: எக்ஸ் / டி சீரிஸ் பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா (59 வயது) தனது வீட்டில் கால் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பிடிஐக்கு அளித்த பேட்டியில் அவரது நெருங்கிய நண்பர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சஞ்சய் குப்தா ஆடிஷ் என்ற படத்தின் மூலம் 1994ல் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், காண்டே, ஷூட்வுட் அட் லோகந்வாலா, காபில் என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். ஹாலிவுட் இயக்குநர் குவின்டன் டரண்டினோவின் படமான ரிசர்வாயர் டாக்ஸ் படத்தின் உத்வேகத்தினால் இவர் எடுத்த ’காண்டே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 2021ல் இவர் எடுத்த மும்பை சாகா வணிக ரீதியான வெற்றியைப் பெறத் தவறியது. கடைசியாக இவர் இயக்கிய மிராண்டா பிரதர்ஸ் 2022ல் ஜியோ சினிமாஸ் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில், சஞ்சய் குப்தா தனது வீட்டில் கால் வழுக்கி விழுந்து தலையில் காயமடைந்து இறந்துவிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இது குறித்து காவல்துறையினர் கூறியிருப்பதாவது: எங்களுக்குக் கிடைத்த முதல்கட்ட தகவலில் இதனை ஏடிஆர் (ஆக்சிடன்டல் டெத் ரிப்போர்ட்) என பதிவு செய்துள்ளோம். அவர் தனது ராம் நகர் வீட்டில் தங்கியுள்ளார். சந்தேகத்துக்கு இடமான எதுவும் அங்குக் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்கள். சஞ்சய் குப்தாவின் நண்பர் மிலாப் ஜவேரி, “உண்மைதான். சஞ்சய் குப்தா இறந்துவிட்டார். கீழே விழுந்து தலையில் அடிப்பட்டது” என பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரது ஸ்டைலான ஆக்‌ஷன் படங்கள் பாலிவுட்டில் என்றென்றும் மறக்காது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இயக்குநராக மட்டுமல்லாமல் வைட் ஃபெதர் ஃபிலிம்ஸ் சார்பில் படங்களையும் தயாரித்து வந்தார். குறிப்பாக அவர் தயாரித்த தஸ் கஹானியான் குறும்படங்களின் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. We mourn the passing of Sanjay Gupta ji, a visionary filmmaker and a notable name in Indian cinema.His distinctive storytelling, cinematic vision and memorable films have left a lasting impression on audiences. His contribution to the world of cinema will continue to be⦠pic.twitter.com/W124pdR2B6 தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை