இந்தியா கூட்டணியின் பேரணியில் தவெக பங்கேற்காதது குறித்து திமுக எம்பி ஆ. ராசா விமர்சித்துள்ளார். ஆ. ராசா | விஜய் - கோப்புப் படம் இந்தியா கூட்டணியின் பேரணியில் தவெக பங்கேற்காதது குறித்து திமுக எம்பி ஆ. ராசா விமர்சித்துள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (நவ. 1) நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் தில்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா திடலில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகம் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை. இத்தொடர்பாக, திமுக எம்பி ஆ. ராசா தவெகவை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ”வாக்குத் திருட்டுக்கு எதிராகத் தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் 'தொடை நடுங்கி' வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை! பாசிசத்திற்கு 'வாலாட்டும்' அப்படி ஒரு ராஜவிசுவாசம்!! இருந்துவிட்டுப் போகட்டும். காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு 'காப்பிரைட்' கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை? பாவம் - காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்!” எனத் தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாசிசத்துக்கு வாலாட்டும் ராஜவிசுவாசம்: தவெக மீது ஆ. ராசா விமர்சனம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗