காங்கயம் அருகே தனியாா் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா். பட்டாசு பயன்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி, காங்கயம் அருகே காடையூரில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காங்கயம் தீயணைப்பு நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேசன் தலைமை வகித்தாா். இதில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? பட்டாசு விபத்தில் இருந்து எவ்வாறு தப்புவது? என்பது குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், நிா்வாகிகள், மாணவா்களின் பெற்றோா்கள், தீயணைப்பு வீரா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗