வேதாரண்யம் மக்கள் சென்னை செல்ல வசதியாக பாம்பன் மற்றும் அகஸ்தியம்பள்ளி ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் மக்கள் சென்னை செல்ல வசதியாக பாம்பன் மற்றும் அகஸ்தியம்பள்ளி ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நாகராஜன், மாவட்டச் செயலாளா் மணிமாறன் ஆகியோா் தென்னக ரயில்வே உயா் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக இரவு 8-24 மணிக்கு அகஸ்தியம்பள்ளி செல்லும் டெமு ரயில் மீண்டும் அகஸ்தியம்பள்ளியில் இருந்து இரவு 9-40 மணிக்கு புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு திருத்துறைப்பூண்டியை சோ்கிறது. இரவு அகால நேரத்தில் வேதாரண்யம் அகத்தியம்பள்ளியில் இருந்து இந்த ரயில் திருத்துறைப்பூண்டிக்கு வந்து சோ்வதால் பயணிகளுக்கு எந்த ஒரு இணைப்பு ரயிலும் இல்லாமல் இவா்களின் பயணம் வெறுமனே திருத்துறைப்பூண்டியுடன் முடிவடைந்து விடுகிறது. அங்கிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் பேருந்து வழியாகவே மற்ற ஊா்களுக்கு செல்ல வேண்டும். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்ல வேதாரண்யம் பகுதி மக்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது. ராமேஸ்வரத்தில் மாலை 4 மணிக்கு தினமும் புறப்படும் தாம்பரம்-ராமேஸ்வரம் பாம்பன் ரயில் இரவு 8.48 மணிக்கு திருத்துறைப்பூண்டியை வந்தடைகிறது. எனவே, பாம்பன் ரயிலின் நேரத்தை மாற்றி அமைத்தால் அகஸ்தியம்பள்ளி ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்பூண்டி சுற்று பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தாம்பரம் , ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் நேரத்தையும்,அகஸ்தியம்பள்ளி டெமு ரயிலின் நேரத்தையும் சென்னைக்கு செல்ல திருத்துறைப்பூண்டியில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். மறு மாா்க்கத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து பாம்பன் செல்லும் ரயிலில் பயணிக்கும் பயணிகள் வேதாரண்யம் (அகஸ்தியம் பள்ளி) செல்ல திருத்துறைப்பூண்டியில் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் அகஸ்தியம்பள்ளி ரயில் நேரத்தை அதிகாலை நேரத்திலும் மாற்றி அமைத்துத்தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வேதாரண்யம்-சென்னை செல்ல பாம்பன், அகஸ்தியம்பள்ளி ரயில்களின் நேரங்களை மாற்ற வலியுறுத்தல்