பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்!

பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது பற்றி... எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து. - (Screengrab via X) பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா அருகே, அமிர்தசரஸ் நோக்கிச் சென்ற கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்தது. இதனால் பயணிகள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில், ரயிலின் பல பெட்டிகளிலிருந்து தீப்பிழம்புகளும் அடர்ந்த புகையும் வெளியேறுவதும், அவசரகால மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், "ராஜ்புரா அருகே உள்ள சராய் பஞ்சாரா ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியபோது, அதன் பொதுப் பெட்டியில் முதலில் தீப்பிடித்தது. அந்தத் தீ, கணநேரத்தில் அருகிலிருந்த மேலும் இரண்டு பெட்டிகளுக்கும் பரவியது" என்றார். தீப்பிடித்ததை உணர்ந்தவுடன் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அச்சமடைந்த பயணிகள், பாதிக்கப்பட்ட பெட்டிகளிலிருந்து அவசரா அவசரமாக வெளியேறினர். இந்த விபத்தில் நான்காவது பெட்டியும் லேசான சேதமடைந்தது. இருப்பினும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் பின்னர் மாற்று ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை