பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் நடந்தது போன்ற தவறான நடவடிக்கையை காவல்துறை எடுக்கக் கூடாது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தது குறித்து... பேராசிரியர் கலையரசன், அமைச்சர் வன்னி அரசு - கோப்புப்படம் பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் நடந்தது போன்ற தவறான நடவடிக்கையை காவல்துறை எடுக்கக் கூடாது என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சனிக்கிழமை (அக். 31) தெரிவித்தார். சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரான கலையரசனை புதன்கிழமை (அக். 28) அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ. காமாட்சி குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்படுவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்த நிலையில், அந்த கணக்கு தன்னுடையது இல்லை என்று கலையரசன் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது: தவறு நடந்திருக்கிறது என்பதற்காகத்தான் முதல்வரே கலையரசனை நேரடியாக அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். எந்த முதல்வரும் இதுமாதிரி நடந்துகொண்டதில்லை. கலையரசன் ஒரு பொருளாதார அறிஞர். குறிப்பாக திராவிட கோட்பாட்டை உள்வாங்கிக்கொண்டு அதனடிப்படையில் செயல்படுபவர். தவறாக நடந்திருக்கிறது என காவல்துறை தலைமை இயக்குநரே (டிஜிபி) சொல்லியிருக்கிறார். எனவே, முதல்வரே நேரில் அழைத்து பேசியிருப்பது என்பது மிக முக்கியமானது. இதுமாதிரியான தவறான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கக் கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பேராசிரியர் கலையரசன் விவகாரம்: இதுபோன்ற தவறான நடவடிக்கை கூடாது! - வன்னி அரசு