பஞ்சாப் தேசிய வங்கி வாடிக்கையாளர்களின் ரூ. 35 கோடி மோசடி குறித்து.. பஞ்சாப் தேசிய வங்கியில் மோசடி - ANI கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்புத் திட்டங்களிலிருந்து சுமார் 35 கோடி ரூபாய் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் தேசிய வங்கியின் வாடிக்கையாளர்கள் பலரும், தங்களது வங்கிக் கணக்கில் பணம் இல்லை, வைப்பு நிதி திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். தங்கள் அனுமதியின்றி பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது குறித்த எந்தவொரு பரிவர்த்தனை எஸ்எஸ்எம் அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை என்றும் வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்க எங்களது கையொப்பம் பெறப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பெரும்பாலானோர் இது பற்றி அறிந்திருக்கவில்லை, எதேச்சையாக வங்கிக் கணக்கில் இருக்கும் இருப்பு குறித்து ஆராய்ந்தபோதும், பணத்தை எடுக்க முயற்சித்தபோதும்தான் தங்களது வங்கிக் கணக்குகள் காலியாகியிருந்ததை அறிந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வங்கி ஊழியர்கள், கிளை மேலாளர் உள்பட ஏராளமானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பல லட்சம் இருப்புத் தொகை தற்போது கணக்கில் இல்லை என்று காட்டப்படுகிறது ஆனால், அந்தத் தொகை யாருக்காவது பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து எஸ்எம்எஸ் வந்திருக்க வேண்டும். அதுபோன்ற எந்த எச்சரிக்கையும் வரப்படவில்லை. சரி வங்கி ஆவணங்களிலாவது கையெழுத்துப் பெற்றிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. பிறகு வங்கிக் கணக்கு காலியானது எப்படி என்று அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். பல வாடிக்கையாளர்கள், வங்கிக் கிளைக்குச் சென்று கேட்டபோதுதான், இதுபோன்றதொரு மோசடி, பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்திருப்பதும், இதுபோன்று ஒன்றல்ல இரண்டல்ல ரூ.35 கோடி மோசடி நடந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எழுப்பும் கேள்வி ஒன்றுதான், அதெப்படி வங்கியில் வைத்திருக்கும் பணம் எங்களுக்கே தெரியாமல் மாயமானது? என்பதே. இதற்கு வங்கி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பஞ்சாப் தேசிய வங்கி வாடிக்கையாளர்களின் பணம் ரூ.35 கோடி மோசடி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗